
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எது ஆயுதம்?
மற்றவர் உயர்வை
மலிவாய் நோக்கும்
பொறாமையா
முயற்சியால்
அவரை முந்த நினைக்கும்
போட்டி மனப்பான்மையா
எது உனது ஆயுதம்?
உற்றோர் உயர
உழைக்கும்
பொது நலமா
தன் உயர்வே
பெரிதென எண்ணும்
சுயநலமா
எது உனது ஆயுதம்?
எல்லாமே எனது
எனும்
பேராசையா
அளவாய்
வாழ நினைக்கும்
ஆசையா
எது உனது ஆயுதம்?
எல்லாவற்றிற்கும்
தீர்வு
வன்முறையா
எத்தரப்பிலும்
சேதமில்லா
அஹிம்சையா
எது உனது ஆயுதம்?
அறிவை வளர்க்க
தேவை
ஒழுங்கீனமான பள்ளியா
ஆசான்களை மதிக்கும்
நல் ஒழுக்கமான கல்வியா
எது உனது ஆயுதம்?
இரண்டில் ஒன்றை
தேர்ந்தெடுக்கும்
வாய்ப்பும்
உன் முன் வந்திருக்கு!
பிந்தியது
உன் வாழ்வை
வளப்படுத்தி சென்றிடும்
மாற்று கருத்து எதற்கு!
இ. சூர்யா, கடலுார்.

