தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூலை 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓலைப்பெட்டி!

பெரும் கடை வீதிகளில் மட்டுமின்றி

சந்து பொந்துகளில் அமைந்திருக்கும்

அந்த சிறு சிறு கடைகளை தேடி

எந்நாளிலும் இல்லாத் திருநாளாக

அலைந்து திரிந்தேன் நான்!

கடை ஒன்றை கண்டதும்

பாய்ந்து சென்று

உங்களிடம் இருக்கிறதா, இருக்கிறதா

என, வினவினேன்...

இல்லையே எனும் பதில் கேட்டதும்

அடுத்த கடைத் தேடி

சென்றேன் நான்!

அது ஒரு அண்ணாச்சி கடை

இங்கு இல்லாமல் இருக்காது

எனும் நம்பிக்கையுடன்

அங்கு சென்று வினவினேன்

கடை பையன்,

'இல்லையே, இன்று போய்

நாளை வாருங்கள்...'

என, கூறக்கேட்டு

அடுத்த கடை தேடி புறப்பட்டேன்!

ஆஹா...

அவரிடம் நிச்சயம் இருக்கும்

எனும் நம்பிக்கையுடன்

கடை நோக்கி விரைந்தேன்...

'அடடா முடிந்து விட்டதே...

மச்சான் கடையில் பாருங்கள்...'

எனும் அவர் பதில் கேட்டு

அடுத்த தெருவுக்கு விரைந்தேன்!

கூட்டமாய் இருக்கிற

அவர் கடை நம்பிக்கை தந்தது...

வரிசையில் நின்று,

நாலு பேர் கடந்து சென்றதும்

அவரிடம் கேட்டேன்...

'ஐயா, உங்களிடம் இருக்கிறதா?'

'அடடா... கடைசி இருப்பை

உங்களுக்கு முன்னால் நின்றவருக்கு

இப்போதுதானே கொடுத்தேன்...'

அவர் பதிலில்

நொந்து போய் வீடு திரும்பினேன்!

வீட்டில் பாட்டியின் குரல் கேட்டது...

உலக நடப்பு தெரிந்து

பாட்டி கையோடு கொண்டு வந்திருந்த

அவளது ஓலைப் பெட்டியில்

நிறைந்திருந்தது,

'கொரோனா'வையும்

அதன் அப்பனையுமே விரட்டிடும்

மூலிகைகளின் கூட்டு மருந்து!

தார்சி எஸ்.பெர்னாண்டோ, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us