PUBLISHED ON : அக் 18, 2020

நன்றி...
இந்த மண்ணிலிருந்து
எடுத்து தான் செங்கல், சிமென்ட்,
ஜல்லி தயாரித்து வானளாவ
கட்டடங்கள் கட்டுகிறோம்!
இந்த மண்ணிலிருந்து
எடுத்து தான் இரும்பு, தங்கம்,
பித்தளை, வெள்ளி, கண்ணாடி
பயன்படுத்துகிறோம்!
இந்த மண்ணிலிருந்து
எடுத்து தான் பெட்ரோல், டீசல்,
'காஸ்' - பிளாஸ்டிக் பொருட்கள்
உருவாக்குகிறோம்!
இந்த மண்ணிலிருந்து
விளைவித்து தான் கீரை, காய்கறி,
கனி வகைகள் உணவாக
உட்கொள்கிறோம்!
இந்த மண்ணிலிருந்து
எடுத்து தான் அணுவையும்,
அணுகுண்டும், மின்சாரமும்
தயாரிக்கிறோம்!
இந்த மண்ணிலிருந்து
கற்றுக் கொண்டு தான் கல்வி,
அறிவியல், பொறியியல், மருத்துவம்
போதிக்கிறோம்!
இந்த மண்ணிலிருந்து
கடலைக் கடக்கவும், விண்ணில்
பறக்கவும், கணினி வளர்க்கவும்
கற்றுக் கொடுக்கிறோம்!
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த
மண்ணிற்கு மனித குலம் என்ன
கைம்மாறு செய்யப் போகிறது
மண்ணுக்குள் சமாதி ஆவதைத் தவிர?
சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.
