தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்றுவோம் தீபம்!

தீபம் ஏற்றிடுவோம்

சருகான கனவெல்லாம்

பட்டு சரிகையாய் பளபளக்க

சரிவில்லா வாழ்வு பெற

ஏற்றுவோம் தீபம்!

பாழும் தீமை மாய்ந்திட

பாவ செயல்கள் நீங்கிட

நாளை உலகம் செழித்திட

ஏற்றுவோம் தீபம்!

மடமை இருள் அகல

அக்கிரம சிறகுகள் பொசுங்க

அநீதி அரக்கனின்

ஆயுளை முடிக்க

ஏற்றுவோம் தீபம்!

நீதியும், தர்மமும் தழைக்க

ஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் மலர

ஏற்றமிகு வாழ்வு எங்கும் சிறக்க

ஏற்றுவோம் தீபம்!

அச்சமும், பேடிமையும்

அடிமை சிறுமதியும் ஒழிய

அதிகார மோகமின்றி

ஆதிக்க தாகமின்றி

பொறுப்புகளை கடமையாக கருத

ஏற்றுவோம் தீபம்!

மனித இனம்

மங்கள வாழ்வு பெற

பூமி பந்தில் நம் முகவரியை

ஆழப் பதிக்க

பாரதத்தின் பெருமையை

பாரெங்கும் பரப்ப

ஏற்றுவோம் தீபம்!

வையம் நமக்கே சொந்தம்

வாழ பிறந்தோம் வாழ்வோம்

உழைப்போம் உயர்வோம்

விடி விளக்காய் திகழ்வோம்

வாழிய... வாழியவே!

செல்வி நடேசன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us