
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலைதனில் நிலையாய்!
தருவதும், பெறுவதும்
அன்பின் நிலை
வருவதும், போவதும்
செல்வத்தின் நிலை...
குழம்புதலும், தெளிதலும்
மனதின் நிலை
உயர்தலும், தாழ்தலும்
உள்ளத்தின் நிலை...
மறுப்பதும், ஏற்பதும்
விருப்பத்தின் நிலை
கொடுப்பதும், எடுப்பதும்
படைப்பவன் நிலை...
நன்மையும், தீமையும்
செயல்களின் விளைவு
கூடுதலும், நீங்குதலும்
உறவுகளின் இயல்பு...
ஆற்றலும், அறிவும்
அவரவர் தெளிவு
வெற்றியும், தோல்வியும்
அவரவர் முயற்சி...
நிலைகளின் நிலையில்
நிலையில்லா வாழ்வு
பிழைகளைத் தந்து
பிழிகிறதே அனுபவமாய்!
கனகா பாலன், சென்னை.