
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனம் வேண்டும்!
ஆறுதல் சொல்ல
மனம் வேண்டும்
அழுகிற போதெல்லாம்!
கொடுத்துதவும்
மனம் வேண்டும்
குறையெனும் போதெல்லாம்!
தேற்றுகிற
மனம் வேண்டும்
நொடிந்திடும் போதெல்லாம்!
போற்றுகிற
மனம் வேண்டும்
வெற்றியின் போதெல்லாம்!
அரவணைக்கும்
மனம் வேண்டும்
தலைவனெனும் போதெல்லாம்!
திருந்திடும்
மனம் வேண்டும்
தவறெனும் போதெல்லாம்!
வருந்திடும்
மனம் வேண்டும்
தப்பெனும் போதெல்லாம்!
துணிந்திடும்
மனம் வேண்டும்
துவண்டிடும் போதெல்லாம்!
கனிந்திடும்
மனம் வேண்டும்
பேசிடும் போதெல்லாம்!
பக்குவமான
மனம் வேண்டும்
பகை வரும்போதெல்லாம்!
தெய்வத்தின்
மனம் வேண்டும்
மனிதனெனும் போதெல்லாம்!
கவியரசன், கடம்பத்துார்.