தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளமையும், முதுமையும்!

புது ஆண்டு பிறந்து விட்டது

இதன் வயது இருபத்து ஒன்று

இந்த நுாற்றாண்டின் கணக்குப்படி!

இளமையும், முதுமையும்

வயதைப் பொறுத்தது அல்ல

அது, அவரவர் மனநிலையை பொறுத்தது!

வயதானால் தோல் சுருங்கலாம்

மனம் சுருங்க வேண்டியதில்லை

என்றும் மனதில் உறுதியுடன் இருக்கலாம்!

80 ஆண்டு மனிதனும்

பயமின்றி, வீரத்தோடு தீரனாக வாழலாம்

20 ஆண்டு வாலிபனும்

கோழையாக சுருண்டு இருக்கலாம்!

இளமை, புதியதை நாடுகிறது

மாற்றத்தை கண்டு அஞ்சுவதில்லை

வாழ்க்கை படகை கொந்தளிக்கும் கடலில்

அனுபவமாக கொண்டு செல்கிறது

இதுதான் இளமையின் இலக்கணம்; வயதல்ல!

எண்பதோ, இருபதோ

எவர் வாழ்க்கை வீண்

என்று நினைக்கிறாரோ

அவரே என்றும் முதியவர்!

எண்பதோ, இருபதோ

எவர் வாழ்க்கை வாழ்வதற்கே

என்று நினைக்கிறாரோ

அவரே என்றும் இளைஞர்!

ச. ரங்கராஜன்,

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us