
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணீரை துடையுங்கள்!
வெற்றி பெறுவோம்
என்ற எண்ணம் தான்
ஒவ்வொரு நாளையும்
மகிழ்ச்சியாக்குகிறது!
நாளை வாழ்வோம்
என்ற நம்பிக்கை தான்
இன்றைய நாளை
இனிமையாக்குகிறது!
எல்லாம் மாறும்
என்ற சிந்தனை தான்
வாழ்வில் பற்றை
உருவாக்குகிறது!
சுற்றமும், நட்பும்
உடன் வரும்போது தான்
மலையளவு துன்பமும்
கடுகளவாகிறது!
இதுவும் கடந்து போகும்
என்ற உண்மை தான்
எதிலும் அடக்கத்தை
கொண்டு வருகிறது!
தேவைப்படுவோருக்கு
உதவுதல் தான்
வாழ்க்கை பயணத்தின்
சுகமான சுமையாகிறது!
அச்சம் இல்லாத
அமைதி தான்
எந்த காலத்திலும்
நிஜமான துணையாகிறது!
சிறிதும் துவளாத
மன உறுதி தான்
வாழ்வில் சாதிக்கும்
வல்லமை தருகிறது!
கு. காந்திராஜா, சென்னை