தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஆக 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதுவும் நடக்கலாம்!

துாசி படிந்த மனதை

துடைத்து வை

போதையை மறந்து

பாதையை பார்

நிற்கும் வரிசையில்

நீதான் கடைசி ஆள்!

இனி, கல்லுாரி படிப்பும்

கானல் நீராகலாம்

ஆராய்ச்சி படிப்பே

கணினி மயமாகலாம்

பல்கலை கழகங்கள்

பழதோட்டம் ஆகலாம்!

கிடைக்கும் வேலையை

ஏற்க தயங்கினால்

நீ படித்த படிப்பும்

காலாவதி ஆகலாம்

எச்சரிக்கையாய் இரு!

எதிர்காலத்தில்

எதுவும் நடக்கலாம்

உனக்காக சிந்திக்க ஒரு

கருவி உருவாகலாம்

தயாராய் இரு!

உடற்கூறு பரிசோதனை

கைபேசியில் காணலாம்

செயற்கை உறுப்புகள்

தெருவில் விற்கலாம்

ஒற்றை கருவியில்

மறு உயிர் பெறலாம்!

ஏலியனுடன் கைகுலுக்கி

பிரபஞ்சம் கடக்கலாம்

இந்த உலகம்

நாளை மாறலாம்

விரைந்து முடிவெடு

அதற்குள் வாழ்ந்து விடு!

பாரதிசேகர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us