தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்மில் தம்மில்...

அவன்

அன்பு வார்த்தைகளை

புண்படுத்த வேண்டாம்

பயன்படுத்த முயற்சி செய்வோம்!

அவன்

நடக்கும் பாதைகளை

அசிங்கப்படுத்த வேண்டாம்

அலங்கரிக்க முயற்சி செய்வோம்!

அவன்

வழங்கும் வார்த்தைகளை

கொச்சைப்படுத்த வேண்டாம்

வாசம்மூட்ட முயற்சி செய்வோம்!

அவன்

சொல்லும் சூத்திரத்தை

சிதைத்து விட வேண்டாம்

விதைத்திட முயற்சி செய்வோம்!

அவன்

ஆசையின் எல்லைகளை

அடைத்து விட வேண்டாம்

அடைந்திட முயற்சி செய்வோம்!

அவன்

காட்டிய வழிகளை

அலட்சியம் செய்ய வேண்டாம்

லட்சியமாக்க முயற்சி செய்வோம்!

இன்று

அவன் இருக்கும் இடம்

நாளை நமது புகலிடத்தின்

முதலிடமாக இருக்கலாம்!

ஆதலால்

நற்பண்புகளை

நம்மில் தம்மில்

பரஸ்பரம் பரிமாறுவோம்!

நம் பகைமைகளை

நம்மில் தம்மில்

பரஸ்பரம் பறித்தெறிவோம்!

நம் வாசலில் பாசப்பூக்கள் பரப்பி

வாசம் வலம் வந்து வசந்தம் ஊஞ்சலாட

நம்மில் தம்மில் பரஸ்பரம்

பந்தங்கள் புதுப்பித்துக் கொள்வோம்!

க. அழகர்சாமி, கொச்சி,

கேரளா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us