PUBLISHED ON : ஜன 30, 2022

இனி, இந்த மண்ணில்...
தேச பிதாவே...உன்னை நினைக்கும் போதெல்லாம்உன் கைத்தடிக்கும்உற்சாகம் தொற்றிக் கொள்கிறது!
அந்த கோலை வைத்து தானேமட்டை பந்தைஉருட்டிச் செல்வது போல்அன்னியனைவிரட்டித் தள்ளினாய்!
உன் மூக்குக் கண்ணாடிவெள்ளைக்கார கம்பெனிகளுக்குசிம்ம சொப்பனமாக இருந்தது...காரணம் -அந்த தொலைநோக்கி வழியேநீ பார்த்தபோதுசுதந்திர இந்தியாஉன் கண்களுக்கு தெரிந்தது!
நீ எழுதிய கடிதங்கள்கல்லாதவனைகனல் கொண்டு எழ வைத்தது;பொல்லாதவனைதெறிப்புண்டு விழ வைத்தது!
ராட்டை சுழற்றி உருவானஉன் கதராடை தான்பாரத மாதாவின்அடையாளச் சின்னமானது!
நீ சுழற்றி வீசியஅகிம்சை சக்கரம் தான்அசோகச் சக்கரமாய்அவதாரமெடுத்தது!
உன் வாய்மையும்துாய்மையும், நேர்மையும் தான் மூவர்ணக் கொடியின்மூன்று வர்ணங்கள்!
விமர்சனங்கள்எத்தனை இருந்தாலும்உன் ஒத்துழையாமை இயக்கமும்தண்டி யாத்திரையும் தான்வெள்ளையரை வெளியேற்றியது!
ஆனாலும் - நீவாங்கித் தந்த சுதந்திர பூமியில்உன்இறுதிச் சொட்டு ரத்தத்தையும்சிந்த வைத்து விட்டோம்!
உன் பிள்ளைகள் மீது இருந்தகறுப்பர்கள் என்றகளத்தைதுடைத்தெறிந்தவன் நீ...இந்த ரத்தப் பழியையும்மன்னித்து விடு மகாத்மா!
இனி,இந்த மண்ணில்இப்படியொருதீவிரவாதத்தையோமதவாதத்தையோமுளைக்க விட மாட்டோம்!
என். ஆசைத்தம்பி, ஆவடி.
