தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்தியமில்லை!

சூழ்ச்சிகள் பெருகி

அனைத்தும் வீழ்ச்சி

காணும் இடத்தில்

வளர்ச்சிக்கு சாத்தியமில்லை!

வஞ்சகம் குவிந்திருக்கும்

வறண்ட நெஞ்சத்தில்

இரக்க உணர்வு சுரக்க

சாத்தியமில்லை!

சுயநலத்தை விரட்டி

பொதுநலன் வளர்க்கும்

புனிதமான இடத்தில்

சுரண்டல் அரங்கேற

சாத்தியமில்லை!

பிடிவாதம் மிகுந்திருக்கும்

முரட்டுத்தன வாழ்க்கைக்குள்

சமாதானத்தை எதிர்பார்ப்பது

சாத்தியமில்லை!

கீழ்படிதல் இன்றி

கவுரவம் தேடும்

கல்நெஞ்ச இதயத்தில்

கண்ணியத்தை பார்க்க

சாத்தியமில்லை!

பிரதிபலன் எதிர்பார்த்து

உதவி கிடைக்கும் இடத்தில்

நாணயத்தை எதிர்நோக்குவது

சாத்தியமில்லை!

வேற்றுமைகளை களைந்து

வெளிப்படையாக பேசும்

திறந்தவெளி மனதில்

ஒளிவு மறைவு இருக்க

சாத்தியமில்லை!

குரோதம் நிரம்பிய

குறுகிய இதயத்தில்

மனித நேயத்தை

வளர்க்காத வரை

பாசமும், நேசமும் மலர

சாத்தியமே இல்லை!

எல்.மூர்த்தி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us