PUBLISHED ON : மார் 27, 2022

அ நிறம் | அளவு
சிந்தனை செய்வாய்!
வண்ணம் குழைத்து
வரையாத தாள்கள்
வியக்க வைப்பதில்லை!
கூட்டுக்குள் ஒடுங்கித்
தவமில்லாத புழுக்கள்
பட்டாம்பூச்சி ஆவதில்லை!
மேகங்கள் மழையாகி
மண் மேல் பொழியாமல்
மரங்கள் வளர்வதில்லை!
திட்டம் போட்டுச்
செய்யாத செயல்கள்
சிகரம் தொடுவதில்லை!
பாதை அறியாமல்
போகும் பயணம்
ஊர் போய்ச் சேருவதில்லை!
நெற்றி வியர்வை
நிலத்தில் விழாமல்
நெல்மணி விளைவதில்லை!
ஆயிரம் மலர்களை
அலைந்து திரியாமல்
தேன் துளி கிடைப்பதில்லை!
வீசும் புயலுக்கு
வளைந்து கொடுத்திட
நாணல் மறுப்பதில்லை!
உளியால் அடி வாங்காத
கற்கள் எவையும்
சிற்பம் ஆவதில்லை!
ஒழுக்கம் இல்லாத
மனித வாழ்வை
உலகம் மதிப்பதில்லை!
எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.
