
வாழ்க்கைக்கு நன்று!
மனிதர்களே...
எப்போதும்
வாய்ப்புகளை எதிர்பார்த்து
காத்திருக்காதீர்கள்
உங்களுக்கான வாய்ப்பை
நீங்களே உருவாக்குங்கள்!
பேராசையோடு
பெரிதாக எதிர்பார்த்து
காத்திருந்து ஏமாந்து
நஷ்டமடைவதை விட
நியாயமான ஆசையோடு
அளவாக எதிர்பார்த்து
விரைந்து செயலாற்றி
லாபமடையுங்கள்!
வாழ்க்கை என்பது
திரும்ப முடியாத ஒருவழிப்பாதை
அதில் வாய்ப்பு என்பது
கண்ணெதிரே பிரிந்து போகும்
பல வழிப்பாதை
உங்களுக்கான பாதையை
நீங்களே தேர்ந்தெடுங்கள்!
விதையிலிருந்து
முளைவிடும் வேர்
மண்ணை மட்டுமே எதிர்பார்த்து
ஒருபோதும் காத்திருக்காது
கடினப் பாறையிலும் கூட
முட்டி மோதி துளிர் விடும்...
அதுபோல்,
வாய்ப்புகளுக்கான
உங்கள் தேடல் முயற்சியை
வைத்துக் கொள்ளுங்கள்!
மீன் பிடிக்க செல்பவருக்கு
துாண்டில் அவசியம்
என்பது போல்
வாய்ப்புகளை நாடும் முன்
உங்கள் திறமைகளை
முதலில் எடை போடுங்கள்!
முயற்சிகள் கைவிட்டாலும்
திறமைகள் கைவிடாது;
வாய்ப்புகள் கைவிட்டாலும்
தன்னம்பிக்கை கைவிடாது;
ஒன்று போனால் இன்னொன்று
என்று முன்னேறுவதே
வாழ்க்கைக்கு நன்று!
ஆர்.ஜெயசங்கரன், வானுார்,
விழுப்புரம்