
எப்படியாவது...
நொடிக்கு நொடி
மாறும் மனநிலை
கொண்ட மனித கூட்டம்
'எப்படியாவது...'
என்ற ஆயுதத்தை
கையிலெடுத்து விட்டது!
எப்படியாவது...
இந்த பள்ளியில்
இந்த கல்லுாரியில்
'சீட்' வாங்கிட
வேண்டுமென்று!
எப்படியாவது...
என்ன பரிகாரம் செய்தாவது
ஜாதகத்தை திருத்தியாவது
விரும்பிய இடத்தில்
விரும்பிய பெண்ணை
மண முடித்துவிட
வேண்டுமென்று!
எப்படியாவது...
எந்த வழியிலும் சென்று
உயர் மதிப்பெண்
எடுத்து விட
வேண்டுமென்று!
எப்படியாவது...
ஆயிரம் சந்து பொந்துகள்
புகுந்தாவது
லஞ்சம் கொடுத்தாவது
விரும்பிய வேலையை
வாங்கிட வேண்டுமென்று!
எப்படியாவது...
இந்த தேர்தலில்
ஓட்டுக்குப்
பணம் கொடுத்தாவது
வெற்றியை
வசமாக்க வேண்டுமென்று!
இன்றைய தலைமுறையை
எப்படியாவது
ஆட்டிப் படைக்கிறது!
எப்படியாவது...
என்பது தட்டிப்
பறிப்பதாகும்!
இப்படித்தான் வாழ வேண்டும்
இப்படித்தான் படிக்க வேண்டுமென
'இப்படித்தான்' என்ற
மனநிலைக்கு மாறிட
எல்லாருக்கும்
எல்லாமும் கிடைக்குமே!
வி.எஸ். ராமு, செம்பட்டி,
திண்டுக்கல்.