தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழப் பழகுகிறேன்!



* சுற்றத்தாரின் சுயநலங்கள்

மனச்சூழலை பாதிக்காமல்

சூழ்நிலையை சாதகமாக்கி

சுகமாய் வாழப் பழகுகிறேன்...



* உறவுகளின் உள்குத்தலின்றி

உணர்வாய் உள்ளன்புடன்

உரிமையில் நேர்மையாய்

உறவாடி வாழப் பழகுகிறேன்...



* மனசாட்சிக்கு பயந்தும்

மற்றவர்களை மதித்தும்

கடவுளின் பயத்தில்

உத்தமமாய் வாழப் பழகுகிறேன்...



* மதிகெட்டவரின் வார்த்தைகளை

செவி கேட்டாலும்

இவ்விந்தை உலகத்தில் - என்

சிந்தைக்கெட்டாமல் வாழப் பழகுகிறேன்...



* முகத்தின் முன் சிரித்தும்

முதுகிற்குப் பின் கரித்தும்

பேசும் வேடதாரிகளை

வேரறுத்து வாழப் பழகுகிறேன்...



* சுயநலம் கெட்டு

பொதுநலம் பேணும்

மதிநலன் கேட்டு - இறைவனிடம்

மன்றாடி வாழப் பழகுகிறேன்...



* அகவை எண்பது தாண்டியும்

அண்டி வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்...



* மனிதனைப் படிக்க... நான் மானிடனே...

அவன் மனதினைப் படிக்க... நான் படைத்தவனல்லவே...



* ஆதலினால் வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்...

உலகே உன் மடி தாராயோ...



— ஸ்ரீபதி, கோவை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us