தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் இந்தியர்கள்!

* நம்மை வெல்ல யாரும் இல்லை...

* எந்திரத்தை கட்டியணைத்து,

உறவுகளை தொலைத்துவிட்டு

வாழும் அந்நியர்கள் அனைவருமே

நம்மிடம் தான் கற்றுக் கொள்கின்றனர்

குடும்ப உறவை!

* உலகமே தலை மீது வைத்து

கொண்டாடும் கலைகளை

படைத்துவிட்டு,

கர்வம் கொள்ளாமல்

கைகட்டி நிற்கிறோம்

ஞானத்தோடு!

* நம்மை பார்த்து,

ஒற்றுமையை கற்றுக்கொள்ளட்டும்

அண்டை நாடுகள்...

பல மொழிகளையும்

இனங்களையும் கொண்ட நாம்,

அன்பால் கைகோர்த்து நிற்கிறோம்!

* இங்கு சூழ்நிலையால்

கண் இழந்தவர்கள் இருக்கின்றனர்...

ஆனால்,

கருணையில்லாதவர்கள் யாரும் இல்லை!

* ஆகையால்,

உறுதியோடு பெருமைப்பட்டு கொள்வோம்

அன்பாலும், கருணையாலும்

நம்மை வெல்ல யாரும் இல்லை!

கருநீலவண்ணன், ஈரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us