PUBLISHED ON : நவ 19, 2023

அ நிறம் | அளவு
காலம் என்பது
காட்டாறு...
அது
யார் கட்டுப்பாட்டுக்கும்
நிற்காது!
வயது என்பது
பூவாகும்...
அது
பூத்து உதிர்ந்த பின்
திரும்பாது!
வாழ்க்கை என்பது
வரலாறு...
அது
தடம் பதித்தவருக்கே
உரியது!
லட்சியம் என்பது
நற்கனவு...
அது
முயன்று பார்ப்பவருக்கே
ஏற்றது!
செய்வனவற்றை
காலம் தாழ்த்தாது
செய்து முடித்திட
வயது ஒரு
பொருட்டே அல்ல!
சாதனையாளராய்
வாழ்க்கையை வாழ்ந்து
வருங்கால சந்ததிக்கு
வழிகாட்டி உதவிட
தடையொன்றும் இல்லை!
நீர் வற்றும் வரை
தெரிந்திடும் பிம்பம் போல
நிலையில்லா வாழ்வில்
நிலைத்த புகழைப் பெற
பேராவல் கொள்ளுங்கள்!
ஒவ்வொரு செயலும்
கற்பிக்கிற அனுபவ பாடத்தை
கவனமாய் சேகரித்து
மேலான சொத்தாக
விட்டுச் செல்லுங்கள்!
— வெ. பாலமுருகன், திருச்சி.
