sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 29, 2026 ,சித்திரை 16, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - நெற்றிக்கண் பாரதி வேண்டும்!

/

கவிதைச்சோலை - நெற்றிக்கண் பாரதி வேண்டும்!

கவிதைச்சோலை - நெற்றிக்கண் பாரதி வேண்டும்!

கவிதைச்சோலை - நெற்றிக்கண் பாரதி வேண்டும்!


PUBLISHED ON : செப் 10, 2023

Google News

PUBLISHED ON : செப் 10, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம் என்றாய்...

உழவு செய்த

கிழவனோடு சேர்த்து

உழவினை

ஒதுக்கி விட்டோம், பாரதி!

காணி நிலம் வேண்டும் என்று

கனவு கண்டாய்

இங்கே...

காணும் நிலமெல்லாம்வானுயர்ந்த

கட்டடங்களாகி விட்டது, பாரதி!

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையை

கொளுத்துவோம் என்றாய்...

மடமையை மட்டுமல்ல

மாதரையே

கொளுத்துகின்றனர், பாரதி!

பட்டங்கள் ஆள்வதும்

சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள்

நடத்த வந்தோம் என்றாய்...

இன்று மது, 'பாரு'க்குள்

பெண்கள் நடப்பது கண்டு

நெஞ்சு பொறுக்குதில்லை, பாரதி!

ஆணுக்கு பெண் நிகரென்றாய்...

திருமணமே இல்லாமல்

ஆணும் - பெண்ணும்

சேர்ந்து வாழும் நிலை கண்டு

மனம் பதறுதே, பாரதி!

ஆலைகள் வைப்போம்

கல்விச்சாலைகள் வைப்போம்

என்றாய்...

சாராயச்சாலைகள் வைத்துவியாபாரச்சாலைகள்

நடத்துகின்றனர், பாரதி!

இனி இவர்களைசாட்டை எடுத்து வேட்டையாட

இளைய பாரதத்தினர்

உதய ஞாயிறு ஒப்பவே

ஏறு போல் நடையினாய் வரட்டும்!

— என்.ஆசைத்தம்பி, சென்னை.






      Dinamalar
      Follow us