தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கம்ப வடிவ பெருமாள்!

கம்ப வடிவ பெருமாள்!

கம்ப வடிவ பெருமாள்!


PUBLISHED ON : மே 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகே வடிவாக, பெருமாளை பல இடங்களில் தரிசித்திருப்போம்... ஆனால், அரியலுார் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவிலில், கல் கம்பம் வடிவில் காட்சி தருகிறார், பெருமாள். இந்த கம்பத்தை தாங்கிக் கொண்டிருக்கிறார், ஆஞ்சநேயர்.

அரியலுார் மாவட்டம், சிதளவாடி எனும் ஊரில், 250 ஆண்டுகளுக்கு முன், கோபாலன் என்பவர் வசித்தார். இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த பசு ஒன்று, மேயச் சென்ற போது, காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால், வருத்தத்தில் இருந்தார், மங்கான்.

மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில், 'அன்பனே... கவலைப்படாதே... காணாமல் போன பசு, கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில், ஓர் ஆல மரத்துக்கும், மாவிலிங்க மரத்துக்கும் இடையேயுள்ள சங்கு இலை புதர் அருகே நிற்கிறது; காலையில், அங்கே கன்றுடன் பசுவைக் காண்பாய்...' என, கூறியது அசரீரி.

மங்கான் அங்கு சென்று பார்த்த போது, பசு, தன் கன்றுடன் நின்றிருந்த இடத்தில், சாய்ந்து கிடந்தது, ஒரு கம்பம். அதன் மீது பால் சொரிந்திருந்தது; அக்கம்பத்தை வணங்கிய மங்கான், பின், பசுவுடன் வீட்டுக்குச் சென்று விட்டார்.

அன்றிரவு மங்கான் கனவில், கல் கம்பம் தோன்றி,'மகனே... உன் முன்னோருக்கும், எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய்... திருமாலை வணங்கிய உன் முன்னோர், பெருமாள் கோவில் கட்ட எண்ணி, இங்கு கல் கம்பம் கொண்டு வரும்போது, வண்டியின் அச்சு முறிந்ததால், என்னை அங்கேயே போட்டு விட்டனர். நீ இன்று கண்டது, அந்த கம்பம் தான். இதை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது; கம்பத்தை நிலை நிறுத்தி, தினமும் வணங்கு; கலியுக கவலையை நீக்கவே நான் தோன்றினேன். என் பெயர் கலியுக வரதராஜப் பெருமாள்...' எனக் கூறி மறைந்தது.

அந்த இடத்தில், கல்லை நிறுத்தி கோவில் கட்டினார், மங்கான்.

நோயுற்ற கால்நடைகள் குணமடைய, அவற்றிற்கு பிறக்கும் முதல் கன்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

மூலஸ்தானத்தில், 12 அடி உயர கம்பத்தை தாங்கி நிற்கிறார், ஆஞ்சநேயர். வைகுண்ட ஏகாதசியன்று, உற்சவமூர்த்தி பவனி நடக்கும். ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார், உற்சவர் கலியுக வரதராஜப் பெருமாள்.

தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. தல விருட்சமான மாவிலிங்க மரம், ஆதிகாலத்திலிருந்தது போலவே செழித்து காட்சி தருகிறது.

தமிழ் ஆண்டுப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, அட்சய திரிதியையன்று கருட சேவை, வைகாசி விசாகத்தன்று வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா, ஆடிப்பெருக்கு, கோகுலாஷ்டமி, அனுமன் ஜெயந்தி, ராம நவமியன்று தேரோட்டம், பங்குனி உத்திரம் என, பல விழாக்கள் இங்கு நடைபெறுகிறது.

அரியலுார்- இரும்புலி சாலையிலிருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது, கல்லங்குடி!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us