sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 10, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு,

என் வயது, 22; திருமணம் ஆகாத இளைஞன். வெளியூரில் தனியார் நிறுவனத்தில், ஆறு மாதங்களாக பணிபுரிகிறேன். இங்கு, வீட்டு வாடகை அதிகம் என்பதால், சிறிய அறை எடுத்து, நானே சமையல் செய்து சாப்பிட்டு, வேலைக்குச் சென்று வருகிறேன். சிறிய அறை என்பதால், ஒரே கட்டில் தான் போட முடியும்.

என் தந்தை ரயில்வேயில் பணிபுரிகிறார். எனக்கு, 24 வயதில் அக்காவும், 20 வயதில் ஒரு தங்கையும் உண்டு; யாருக்கும் திருமணம் ஆகவில்லை. என் அக்கா நர்சிங் பயிற்சி முடித்து, நான் வேலை பார்க்கும் நகரத்திலேயே அவளுக்கும் தனியார் நர்சிங் ஹோமில் வேலை கிடைத்து, ஒரு மாதம் முன் தான் வந்தாள். நாங்கள் இருவரும் ஒரே அறையில் வசித்து வருகிறோம். சிறிய அறை என்பதால், ஒரே கட்டிலில் படுப்பது வழக்கம்.

உடை மாற்றுவது, சமையல் செய்வது எல்லாம் ஒரே அறையில் தான். சில நாட்களுக்கு முன், ஒருநாள் இரவில், சிறுநீர் கழிக்க எழுந்தபோது, என் அக்காவின் உடை விலகி, மார்பு எடுப்பாகத் தெரிந்தது. அந்த இரவின் மெல்லிய வெளிச்சத்தில் பார்த்தபொழுது, என் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கட்டிப் பிடித்து படுத்தேன்; என் அக்கா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், இருவரும் இணைந்து விட்டோம். அதன்பின், இருவரும் அடிக்கடி கணவன் - மனைவி போல் வாழ்கிறோம்.

என் அக்கா மருத்துவமனையில் பணிபுரிவதால், கருத்தடை முறைகளை பின்பற்றி வருகிறோம். பல நேரங்களில், மருத்துவமனையிலிருந்து ஆணுறை கொண்டு வருவாள். 'இனி நாம் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது; இது தவறு...' என கூறினேன். அதற்கு என் அக்கா, 'நம் இருவருக்கும் திருமணம் ஆகும் வரை உடலுறவு வைத்துக் கொள்ளலாம்; அதன்பின் எல்லாவற்றையும் மறந்து, அவரவர் துணையுடன் வாழலாம்...' எனக் கூறுகிறாள். சொந்த சகோதரி என்பதால், என் மனம் சஞ்சலப்படுகிறது.

வேறு ஏதேனும் அறை எடுத்து தனியாக செல்லலாம் என்றாலும், அவள் மட்டும் தனியாக இருக்க, மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. என் பெற்றோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாமல் பல குடும்பங்களில் தந்தை - மகள், அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி உடலுறவுகள் நடைபெறுவதாக கூறி, இதில் தவறொன்றும் இல்லை என்கிறாள் அக்கா. இருப்பினும், இதிலிருந்து விலகவே விரும்புகிறேன்.

எங்கள் குடும்பம் கவுரவமான குடும்பம். என்ன செய்வது என, புரியாமல் தவிக்கிறேன். இதிலிருந்து விடுபட, நீங்கள் தான் வழி கூற வேண்டும்.

இப்படிக்கு,

அன்புடன் மகன்.


அன்புள்ள மகனுக்கு,

இயற்கைக்கு புறம்பான, மத நம்பிக்கைகளுக்கு முரணான, சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிரான விதத்தில், நீயும், உன் அக்காவும் தாம்பத்யத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள். தன் மலத்தையே தின்பது போன்று, சில மிருகங்கள் தங்கள் குட்டிகளையே இரை எடுப்பது போன்ற இழிசெயல் இது. மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், புழு - பூச்சிகளுக்கும் தான், புணர்ச்சி விதிகள் இல்லை; மனித இனத்துக்கு உண்டு.

வெளியூரில் நீயும், உன் அக்காவும் தனி அறையில் தங்கியதால் ஓர் அலங்கோலம் அரங்கேறி விட்டது. நடந்த தவறில், இருவருக்கும் சரிபாதி பங்கு உண்டு. உன் அக்கா செவிலியராக இருப்பதால், கருத்தடை சாதனத்தை உபயோகித்து, கர்ப்பத்தை தடுத்து விடலாம் என்ற தைரியமே, இந்த குற்றச் செயலில், உன் அக்காவை ஈடுபடுத்தியுள்ளது. இதையும் மீறி, உன் அக்கா கர்ப்பமடைந்து விட்டால், என்ன ஆகும் உங்கள் நிலை?

அக்காளும், தம்பியும் திருமணம் செய்து கொள்வீர்களா... அக்காவிற்கு பிறக்கும் குழந்தையை, மகன் என்று அறிவிப்பாயா, இந்த காட்டுமிராண்டித் தனமான உறவு, உன் பெற்றோருக்கு தெரிந்தால் என்ன ஆகும்? உன் தங்கையை யார் மணந்து கொள்வர்... சமுதாயம் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பார்த்து, கைகொட்டி சிரிக்கும்!

இது மாதிரியான, முறையற்ற செயல்கள் பல குடும்பங்களில் நடப்பதாக உன் அக்கா சொல்வது, செய்த குற்றத்தை நியாயப்படுத்தும் செயல்.

இந்த இழிவான, மானங்கெட்ட உறவுக்கு, உடனே மிகப் பெரிய முற்றுப்புள்ளி வை. உன் அக்காவிற்கு நர்சிங் ஹோமுக்கு அருகிலேயே, தனி அறை பார்த்து தங்க வை. அவளின் பாதுகாப்பிற்கு உன் அம்மாவை உடன் தங்க வை. சிறிது காலம் நீயும், உன் அக்காவும் போனில் கூட பேசாமல் இருங்கள். உன் அக்காவிற்கு உடனடியாக வரன் பார்த்து, திருமணம் செய்து வைப்பது நல்லது. செய்த தவறுக்கு, கோவிலுக்கு சென்று, இறைவனிடம் பாவமன்னிப்பு இறைஞ்சு. உன் பணியில், முழு கவனம் செலுத்து. செக்ஸ் மீதான ஈடுபாட்டை, கட்டுப்பாட்டில் வை. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் காத்திருந்த பின் தான், திருமணம் என்ற முடிவுக்கு வா.

சாக்கடையில் விழுந்த நீ, குளித்து, புத்தாடைகளை உடுத்தி உள்ளும், புறமும் சுத்தமாகு!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்






      Dinamalar
      Follow us