sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 20, 2019

Google News

PUBLISHED ON : ஜன 20, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு,

என் வயது: 43, இல்லத்தரசி. கணவர் வயது: 46, தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார். எங்களுக்கு இரு மகள்கள். மூத்த மகள், கல்லுாரியில், பி.இ., மூன்றாம் ஆண்டும், இளைய மகள், பி.எஸ்சி., முதல் ஆண்டும் படிக்கின்றனர்.

மூத்த மகள், 'புராஜெக்ட்' வேலை மற்றும் படிப்பதற்கு என்று காரணம் கூறி, தன் கல்லுாரி தோழியர் மற்றும் தோழர்களை, அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து வருவாள். மகள் மீது உள்ள நம்பிக்கையாலும், நம் கண் முன் தானே இருக்கிறாள், தவறு ஏதும் நடந்து விடாது என்று இருந்து விட்டேன்; என் கணவரும் ஏதும் சொல்ல மாட்டார்.

இந்நிலையில், வீட்டிற்கு வந்த மூத்த மகளின் கல்லுாரி தோழன் ஒருவனும், என் இளைய மகளும், யாரும் அறியாமல், காதலித்துள்ளனர். எங்களுக்கு விஷயம் தெரிவதற்குள், இருவரும் ஓடிப்போய், திருமணம் செய்து கொண்டனர்.

இதில், என் மூத்த மகளுக்கோ, அவளுடைய தோழியர் மற்றும் தோழர்களுக்கோ, சிறிது கூட தொடர்பே இல்லை என்பது நிச்சயமானது.

யார் யாரையோ வீட்டிற்குள் அனுமதித்ததால் தான் இந்த நிலை என்று, அக்கம் பக்கத்தினர், கேலி பேசி சிரிக்க, என் கணவரோ, 'இதையெல்லாம் ஆரம்பத்திலேயே அனுமதித்திருக்கக் கூடாது; கவனிக்காமல் விட்டது தவறு...' என்று, என் மீது எரிந்து விழுகிறார்.

வீட்டில் பேச்சு, சிரிப்பு என்று எதுவும் இல்லை; துளி கூட நிம்மதி இல்லை.

படிப்பும் இல்லாமல், வேலையும் இல்லாமல், எங்கே கஷ்டப்படுகிறாளோ என்று ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறோம். மூத்த மகளோ, நடந்த தவறுக்கு, தான் காரணமில்லை என்றாலும், குற்ற உணர்ச்சியால், முடங்கிக் கிடக்கிறாள்.

இந்த சூழ்நிலையிலிருந்து மீள வழி சொல்லுங்கள், அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு,

சில பெற்றோர், மகன் - மகள்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பர். சிலர், மகன் - மகள்களை கூண்டுக்குள் அடைத்து, சங்கிலியால் பிணைத்து கறார், கண்டிப்பு காட்டுவர். சில பெற்றோரோ, மகன் - மகள்களை சுதந்திரம் கொடுக்க வேண்டிய தருணங்களில் கொடுத்து, கண்டிப்பு காட்ட வேண்டிய தருணங்களில் தண்டித்து, வளர்ப்பர்.

பெற்றோர் வளர்ப்புப்படி குழந்தைகள் வளர்வது, 60 சதவீதம் தான். உறவினராலும், தெரு நட்பாலும், பள்ளி சகவாசத்தாலும், மரபணு மந்திரம் மற்றும் சினிமா, 'டிவி' சீரியல் பாதிப்பாலும், 40 சதவீத குழந்தைகள், சுயநலமாக, தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வர்.

அண்ணன் - தம்பிகள் உடன் பிறக்காத பெண்களுக்கு, கூடுதல் எதிர்பாலின ஈர்ப்பு வந்து விடுகிறது. இவர்களில் அதிகம் பேர், காதலில் ஈடுபட்டு, அசட்டு தைரியமாய் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர்.

படிக்காத பெண்களை விட, படித்த பெண்களுக்கு தான், ஆண் - பெண் உறவு மற்றும் திருமணம் பற்றிய அறியாமை மிக அதிகம் இருக்கிறது. இவர்கள் படிக்கும் ஏட்டுக் கல்வி, வாழ்க்கை கல்வியை ஒருபோதும் போதிப்பதில்லை.

மகன் - மகள்களுக்கு சுதந்திரம் தரலாம். ஆனால், அது கண்காணிப்புடன் கூடிய சுதந்திரமாய் இருக்க வேண்டும். பெற்றோர் கவனக்குறைவாய் இருந்தால், குழந்தைகளுக்கு சாகசம் செய்து பார்க்கும் அசட்டு துணிச்சல் வந்து விடும்.

தவறு உங்கள் மீது இருந்தாலும், தொடர்ந்து குற்ற உணர்ச்சியில் அமிழ்வது, குடும்பத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...

ஓடிப்போய் திருமணம் செய்த பின், உன் மருமகனும், மகளும் தொடர்ந்து படிக்கின்றனரா அல்லது படிப்பை நிறுத்தி, குடும்பம் நடத்துகின்றனரா... எந்த ஊரில் குடும்பம் நடத்துகின்றனர்... ஓடிப்போய் திருமணம் செய்ததில், உன் மருமகனின் பெற்றோர், என்ன நிலை எடுத்திருக்கின்றனர்...

மருமகன் எந்த மதத்தை சேர்ந்தவன்... வெறும் தாம்பத்ய சுகத்துக்காக திருமணம் செய்து கொண்டனரா அல்லது ஆயுளுக்கும் பந்தம் நீடிக்க வேண்டும் என, சங்கல்பம் கொண்டுள்ளனரா என, எல்லாவற்றையும் முழுமையாக அலசி ஆராய்ந்து, தெளிவு பெறு.

மகளையும், மருமகனையும் வீட்டிற்கு வரவழை. படிப்பை தொடரட்டும். இருவருக்கும் நடந்த கோவில் திருமணத்தை, அதிகாரப்பூர்வமாய் பதிவு செய். கலப்பு மணம் என்றால், மணமக்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் சலுகை உண்டு.

ஏதாவது ஒரு மண்டபத்தை பிடித்து, திருமண வரவேற்பை நடத்தி, சொந்த பந்தங்களுக்கு விருந்து வை. மருமகன், பொறியியல் படிப்பை முடித்து, வேலைக்கு போகும் வரை, அவர்களுக்கு உன் வீட்டிலேயே தனி அறை ஒதுக்கி தங்க வை அல்லது பண வசதி இருந்தால், தனி வீடு பார்த்து, அவர்களை தனிக்குடித்தனம் வை.

வெறும் குற்ற உணர்ச்சி, நடந்த அசம்பாவிதத்துக்கு தீர்வாகாது. மூத்த மகளை, பொறியியல் படிப்பை தொடரச் சொல். அவளின் தேவையில்லாத, ஆண் - பெண் நட்புகளை கத்தரி.

ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, அதிகாரப்பூர்வ பதிவு மூலமும், திருமண வரவேற்பு மூலமும், சமூக அங்கீகாரம் பெற்றுத் தந்த உன் மதிநுட்பத்தை, உறவும், நட்பும் பெரிதும் பாராட்டும். ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவள் தானே என, இளைய மகளை குத்திக் காட்டி விடாதே.

இளைய மகள் வாழ்க்கை சீரானால், உன் வீட்டில் பேச்சும், சிரிப்பும் திரும்பி, டன் கணக்கில் நிம்மதி தங்கும். ஒரு ஓவியரின் துாரிகை தவறு செய்தால், ஓவியத்தை கிழித்து போடாமல், தொடர்ந்து வரைந்து, முழுமையான ஓவியமாக்க வேண்டும். அது தான், வாழ்க்கையின் சிதம்பர ரகசியம்.

— என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us