sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 20, 2022

Google News

PUBLISHED ON : நவ 20, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரி —



என் வயது: 50. கணவரின் வயது: 53. தாய் மாமன் மகன் தான், அவர். நான், பி.காம்., பட்டதாரி. அவர், 10ம் வகுப்பு முடிக்கவில்லை.

சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக, அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். ஆனால், வீட்டில் எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

வீட்டிற்கு தெரியாமல், வீட்டை விட்டு அவருடைய இருப்பிடத்திற்கு சென்று விட்டேன். அங்கிருந்தபடியே பஞ்சாயத்தார் மூலம், என் வீட்டாரிடம் பேசி, முழு சம்மதம் பெற்று, திருமணம் செய்து கொண்டோம்.

திருமணமாகி ஆறு மாதம், அவருடைய வீட்டில் இருந்தோம். அங்கு, அவருக்கு சரியான வேலை இல்லாததால், பிறந்த ஊருக்கு வந்து, என் வீட்டாருடன் சேர்ந்து இருந்தோம்.

இங்கு அவருக்கு, என் முயற்சியில், சொந்தமாக ஒரு தொழில் வைத்துக் கொடுத்தேன். அதிலும் நஷ்டம் வரவே, அதை விட்டு நிரந்தரமில்லாத வேறு பல வேலைகளுக்கு சென்றார். நான் நிரந்தரமாக ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

எங்களுக்கு முதலில் இரண்டு பெண் குழந்தைகளும், மூன்றாவதாக, ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர். என் வருமானத்தில் தான் நாங்கள் ஐந்து பேர், என் குடும்பம் மற்றும் அவர் குடும்பத்தில், தலா மூவர் என, மிகவும் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தினேன்.

நான் வேலை செய்யும் அலுவலகத்திலேயே, முதலாளியிடம் கேட்டு, அவரையும் வேலையில் அமர்த்தினேன். இருவரும் சேர்ந்து ஒரே அலுவலகத்தில், 15 ஆண்டுகள் ஒன்றாக வேலை பார்த்தோம்.

என் மூத்த மகள், 19 வயது இருக்கும் போது, வேறு ஜாதி பையனை காதலித்து, திருமணம் செய்த பின், அவர்கள் இருவருமே, 21 வயதில் இறந்து விட்டனர். இளைய மகளுக்கு, 19 வயதில் திருமணம் செய்து கொடுத்து, கணவருடன் வாழ்ந்து வருகிறாள். மகன், 10ம் வகுப்பு படித்து வருகிறான்.

தற்போது, நான் கற்றுத் தந்த வித்தையை வைத்து, தனியாக அலுவலகம் வைத்துள்ளார், கணவர்; நான்கு பேரை வேலைக்கு அமர்த்தி, முதலாளி ஸ்தானத்தில் இருந்து, இன்று அதிகமான சம்பாத்தியத்துடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், என் வீட்டுக்கு எதிரில், ஒரு பெண் குடி வந்தாள். அவள், இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தாள்.

எங்களுடன் பழக்கம் ஏற்படுத்தி, என் கணவரை, 'அண்ணன்' என்று கூப்பிட்டு, வீட்டிற்கு வர போக இருந்தாள். நானும் முழு நம்பிக்கையில், எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தேன். அந்த பழக்கத்தில், என் கணவருடன் தகாத உறவை ஏற்படுத்தி, தொடர்பில் இருந்துள்ளாள்.

விஷயம் தெரிந்து, அவளிடம் கேட்டதற்கு, 'நான் அப்படித்தான் அவரிடம் பேசுவேன். உன்னால் என்ன செய்ய முடியும். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்...' என்று எடுத்தெறிந்து பேசினாள்.

அவளின் பேச்சைக் கேட்டு, கணவர் என்னிடம் பேசுவதில்லை. குடும்பத்தின் மேல் பாசமில்லாமல் இருக்கிறார். அவருடைய நண்பர்களிடம், 'இல்லற வாழ்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் தான், அந்தப் பெண்ணை வைத்திருக்கிறேன்...' என்று சொல்லித் திரிகிறார்.

இவரிடம் நிறைய பணம் கறக்கிறாள், அவள். அந்த பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பது, கணவரது மற்றும் அப்பெண்ணின் பெற்றோருக்கும், மகன்களுக்கும் தெரியும்.

பிறந்த வீட்டில், எனக்கு ஆதரவாக புத்தி சுவாதீனமில்லாத ஒரு சகோதரி மட்டும் இருக்கிறார்.

'அவன் போற வரை போகட்டும், கடைசியில் உன்னிடம் தான் வருவான். அதுவரை நீ பொறுமையாக இரு...' என கூறுகின்றனரே தவிர, அவரை யாரும் தட்டிக் கேட்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அந்த பெண்ணை, என் கணவர் திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றனர், சிலர்.

நான் இருக்கும்போது, அவர், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியுமா... அந்த திருமணம் செல்லுமா, சட்டத்தில் இடம் இருக்கிறதா... போலீஸ், கோர்ட் என்று சென்றால், எனக்கு நியாயம் கிடைக்குமா?

என் பிள்ளைகள் கூட, அவர் நல்லவர். நான் தான் தவறாக நினைத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். அவர்களும் அப்பாவின் பக்கம் தான் இருக்கின்றனர்.

எனக்கு சரியான தீர்வை கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,

ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி.



அன்பு சகோதரி —



கணவர் விஷயத்தில் நீ, என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

* ஹிந்து திருமண சட்டம், 1955ன் கீழ், திருமணத்தின் போது, எந்த ஒரு தரப்பினருக்கும் வேறு ஒரு துணைவர் உயிரோடு இருக்கக் கூடாது என்ற நிலையில் தான், இரண்டாம் திருமணம் சட்டப்பூர்வமானதாக நிலை நாட்டப்படும்.

இரு துணை மணம், குற்ற செயல் என்கிறது, பிரிவு 494. இரண்டாம் திருமணம் செய்ய உடந்தையாக இருப்போரும், 494 மற்றும் 109 பிரிவுகளின்படி தண்டிக்கப்படுவர். கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா என்பதை, ஆதாரப்பூர்வமாக உளவறி

* கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆதாரங்களை, மகன் மற்றும் மகளிடம் காட்டி, தந்தையின் சுயரூபத்தை தோலுரித்து காட்டு

* ஆதாரங்களுடன், கணவர் மீது எழுத்துப்பூர்வ புகார் கொடு. கணவரையும், அப்பெண்ணையும் காவல்துறை கூப்பிட்டு விசாரிக்கும். புகார் கொடுக்கும் போதும், கணவரை காவல்துறை விசாரிக்கும் போதும், உரிமையியல் வழக்கறிஞரை துணைக்கு வைத்துக் கொள். காவல் அதிகாரி, கணவரிடம் கையூட்டு பெற்று, உனக்கு பாதகமாய் நடந்து கொள்ளாமலிருக்க, கண்கொத்தி பாம்பாக செயல்படு

* பிரம்மபிரயத்தனம் பண்ணிதான் ஜாமினில் வருவார், கணவர். வழக்கை கவனமாக நடத்தினால், கணவருக்கு ஏழு ஆண்டு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்

* கணவர், இரண்டாம் திருமணம் செய்யும் ஆயத்தங்களில் இருக்கும் போது, நீ அவரை மோப்பம் பிடித்தாலும், காவல்நிலையத்தில் அவர் மீது புகார் செய். இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல், தன் கள்ளக்காதலியை விட்டு விலகி நிற்பதாக, கணவர் எழுதி கொடுத்தால், உன் புகாரை வாபஸ் பெறலாம்

* இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல், தன் ஆசை நாயகியாகவே வைத்துக் கொள்ளும் முடிவில் கணவர் இருந்தாலும், அதையும் அனுமதிக்காதே; சிறிதளவு நரித்தனமும், சிறிதளவு வன்முறையும் உபயோகித்து, அவர்களை நிரந்தரமாக பிரி

* கணவரின் தொழிலை, நீ மேற்பார்வை பார்த்து, வரவு - செலவுகளை உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பார்.

மகள், மகனுடனான உன் தகவல் தொடர்பை மேம்படுத்து.

— என்றென்றும் பாசத்துடன்,

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us