PUBLISHED ON : ஜூன் 07, 2015

அ நிறம் | அளவு
கேரளாவில் உள்ள கண்ணூரைச் சேர்ந்த கவிதா, மூன்றரை வயது குழந்தையாக இருந்தபோது, போலியோ அவளை ஊனமாக்கியது. மகளின் நிலை கண்டு பெற்றோர் ஆரம்பத்தில் சோர்வு அடைந்தாலும், விதி, அவளை அப்படியே விட்டுவிடவில்லை. பெற்றோரின் விடாமுயற்சியால், தற்போது, கவிதா, 'சகலகலா வல்லி'யாக உள்ளாள்.
இன்று, பருவ மங்கையாக உள்ள கவிதா, உதடுகளுக்குள் பேனா வைத்து கவிதை எழுதுகிறார்; ஓவியங்கள் வரைகிறார்; மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பி, மற்ற ஊனமுற்றோருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறார்.
— ஜோல்னாபையன்.
