PUBLISHED ON : ஜன 28, 2018

ஒரு காலத்தில், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டும் கிடைத்து வந்த பிரியாணி, இன்று நாள் தவறாமல், வேளை தவறாமல் கிடைக்கும் உணவாகி விட்டது.
கொண்டாட்டங்களின், ஸ்பெஷல் உணவாகவும் ஆகிவிட்டபடியால், பிரியாணி இல்லாமல் விருந்து இல்லை என்ற சூழலும் உருவாகியுள்ளது.
நாளுக்கு நாள் பெருகி வரும் பிரியாணி ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், பிரியாணி கடைகளும் பெருகி வருகின்றன.
அதில், சமீபத்தில் அறிமுகமாகி, மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது, 'ஷபாஷ் பிரியாணிஸ்!'
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ருதி திலக். வழக்கறிஞரான இவர், தமிழகத்தின் முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரியான திலகவதியின் மருமகளும் கூட; இவரது கணவர் திலக் பிரபு, பிரபல வலி நிவாரண டாக்டர்.
பிரியாணி ரசிகர்களான இவர்கள், எங்கு நல்ல பிரியாணி கிடைக்கும் என்று தேடி தேடி சாப்பிடக் கூடியவர்கள்.
இவர்களது தேடலின் முடிவில், சமூக அக்கறையுடன், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரியாணி தயாரிப்பவர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்தனர்.
'அருமையான முறையில், அசைவ உணவு சமைக்கும் கைப்பக்குவம் பெற்றுள்ள நீ, முயன்றால், நிச்சயம் முடியும்...' என்று கணவர் பிரபு திலக் கொடுத்த ஊக்கத்தில் பிறந்தது தான், 'ஷபாஷ் பிரியாணிஸ்!' பிரியாணி சாப்பிடுவோர், சாப்பிட்டு முடித்ததும், 'ஷபாஷ்' என்று மனதார பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவானது தான், 'ஷபாஷ் பிரியாணிஸ்!'
அடைத்து வைத்து வளர்க்கப்படும் கோழிக்கறிக்கும், மேய்ச்சலில் இருக்கும் கோழிக்கறிக்கும் சுவையில் வித்தியாசம் உண்டு. இதேபோல மூலிகைகளை சாப்பிட்டு வளரும் வெள்ளாட்டின் கறிக்கும் தனி ருசி உண்டு.
பண்ணைகளில் வளர்க்கப்படும் வெள்ளாடு, கோழி, வீட்டில் அரைக்கப்படும் மசாலா மற்றும் மரச்செக்கு எண்ணெய் உபயோகித்து, பாரம்பரியமான விறகு அடுப்பில், ஸ்ருதி திலக்கின் மேற்பார்வையில், பார்த்து பார்த்து சமைக்கப்படும் இந்த பிரியாணி, குறுகிய காலத்தில், சென்னையின் மிக ஆரோக்கியமான பிரியாணி என்று பெயர் எடுத்துள்ளது.
நியாயமான விலையில் கிடைக்கும் இந்த பிரியாணிக்கு, மக்கள் தந்த ஆதரவு காரணமாக, இப்போது, மண் பானையில் தயார் செய்யப்படும் கறி, கோழி மற்றும் மீன் குழம்புகளும், இறால் தொக்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
வாரத்தின் ஏழு நாட்களும், ஆண்டின், 365 நாட்களும், போன் செய்தால் போதும், மதியமும் - இரவும், பிரியாணி உங்கள் வீடு தேடி வரும். பிரியாணியை பேக்கிங் செய்யப்படும் பெட்டி கூட, சுற்றுச் சூழலுக்கு எவ்வித தீங்கும் செய்யாத, எளிதில் மக்கக்கூடிய கரும்பு சக்கையில் செய்யப்பட்ட பெட்டி மற்றும் பைகளில் தான் வழங்கப்படுகிறது.
'இப்போதைக்கு சென்னையில் மட்டும் வழங்குகிறோம். மக்களின் வரவேற்பை பொறுத்து, மற்ற ஊர்களில் ஷபாஷ் பிரியாணியை வழங்க இருக்கிறோம்...' என்கிறார்
ஸ்ருதி திலக். பிரியாணி தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள்: 98404 46699, 85858 55353.
நாட்டின் முதல், 'டயட்' பிரியாணி!
பிரியாணிக்கு ஈடு இணை இல்லை தான். ஆனால், அதன் கலோரி கணக்குதான் சாப்பிட தயக்கத்தை தருகிறது என்பது பிரஷர் மற்றும் ஷுகர் போன்ற பிரச்னை உள்ளவர்களின் ஆதங்கம். அவர்களின் ஆதங்கத்தை போக்குவதற் காகவே, 'டயட்' பிரியாணியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த, 'டயட்' பிரியாணி, பிரவுன் அரிசியால் தயாரிக்கப்படுவதால், கலோரி பிரச்னை இல்லை. ஆகவே, பிரச்னை வரும் என்ற பயமின்றி, ஷபாஷ் பிரியாணியை சுவைக்கலாம்.
சைவமும் உண்டு!
'வீட்டில் உள்ளவர்களே இப்போது பாக்கெட் மசாலாவை உபயோகிக்கும் இந்த காலத்தில், அரைத்த மசாலாவையும், மரச்செக்கு எண்ணெயும் கொண்டு உணவு தயார் செய்வது மிக மிக சந்தோஷமான விஷயம் தான். ஆனால், நாங்கள் சைவம் சாப்பிடுபவர்கள். எங்களுக்கு உங்கள் ருசியான சமையல் கிடைக்குமா...' என்று கேட்பவர்களுக்காக, சைவ உணவும் வழங்கப்படுகிறது. சைவ பிரியாணி, சில்லி கோபி, தவா பன்னீர், ரச வடை, மஷ்ரூம் 65 மற்றும் வெஜ் நுாடுல்ஸ் போன்ற சைவ உணவுப் பட்டியலும் நீள்கிறது.
வாரக் கடைசி விருந்து!
சென்னையில், வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களின்போது, வீட்டில் சமைக்காமல், மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களுடன் பேசி, விளையாடி பொழுதைக் கழிப்பது என்ற கலாசாரம் சமீபத்தில் பரவியுள்ளது. அதுமட்டுமில்லாமல், எந்நேரமும் சமையலறையே கதியாக கிடப்பவர்களுக்கு, அன்று முழுமையாக விடுமுறை கொடுப்பதும் வழக்கில் உள்ளது.
எல்லாம் சரி... அன்றைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்பதுதானே கேள்வி... வீட்டில் ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவு என்ன என்பதை முதல் நாளே, 'ஷபாஷ் பிரியாணி' நிர்வாகத்திடம் சொல்லிவிட்டால் போதும், வேளா வேளைக்கு சூடான, சுவையான உணவு, வீடு தேடி வரும். சாப்பிடும் நேரம் உட்பட, எல்லா நேரமும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கலாம்.
-எல்.முருகராஜ்
