தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருத்துவம்!

நம்மிடமே இருக்கு மருத்துவம்!

நம்மிடமே இருக்கு மருத்துவம்!


PUBLISHED ON : ஜன 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமியார் - மருமகள் பிரச்னை, பணக் கஷ்டம், அலுவலக பிரச்னை, நோயால் அவதி என, எந்த பிரச்னையாக இருந்தாலும், கவலை வேண்டாம்... உங்களிடமே இருக்கிறது அதற்கான மருந்து.

அதிகாலை எழுந்தவுடன், இரு கைகளிலும் கல் உப்பை வைத்து மூடி, கிழக்கு நோக்கி அமருங்கள்; மடியில், ஓர் வெள்ளைத் தாளை வைத்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு மாமியாரால் பிரச்னை என்றால், கண்ணை மூடி, 'எனக்கும், என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை; நாங்க சந்தோஷமாக இருக்கிறோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க, நான், அவங்கள புரிஞ்சுக்கிட்டேன்; என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்...' என்றோ, பணப் பிரச்னை என்றால், 'எனக்கு நிறைய பணம் கிடைக்கும்; என் கஷ்டமெல்லாம் தீரும்...' என்றோ, நோயால் அவதிப்பட்டால், 'எனக்கு எந்த நோயும் இல்ல; உடம்புல இருக்கிற பிரச்னை தீர்ந்திடுச்சு; நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்...' என்றோ திரும்பத் திரும்ப, 10 நிமிடம் சொல்லிய பின், கையில் இருக்கும் உப்பை, வெள்ளைத் தாளில் சிந்தாமல் கொட்டி, மடித்து, ஓடும் தண்ணீரில் கலந்து விடுங்கள்.

இது போன்று, உங்கள் பிரச்னைக்கு ஏற்ப, பாசிட்டிவ்வாக பிரார்த்தனை செய்யுங்கள்; பத்து நாட்களுக்குள் நல்ல பலன் தெரியும்.

இதை, மனதுக்குள்ளோ அல்லது வாய் விட்டு சத்தமாகவோ சொல்லலாம். 'இது என்ன வேடிக்கை... கையில் இருக்கற உப்பு எப்படி வேலை செய்யும்?' என்று கேட்கிறீர்களா...

இது ஒன்றும் புதிதில்லை; காலம் காலமாக நம் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கிற ஒரு விஷயம் தான்!

இன்றும், மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுற்றும்போதும், கையில் உப்பு வைத்து சுற்றுவர்; சில கோவில்களில் உப்பு வாங்கிக் கொட்டுவர்.

பாவத்தை போக்குகிறோம் என்று சொல்லி, கடலில் குளிப்பது, கடல் தண்ணீரை தலையில் அள்ளித் தெளிப்பது, கடலோரத்தில் ஈமக்கிரியைகள் செய்வது, கடலில் கால் நனைப்பதும் உண்டு.

எதிர்மறை மற்றும் நேர்மறை சக்தி ஆகிய ரெண்டும் தான் மனிதனோட குணநலன்களையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி கொண்டது, உப்பு.

கைக்குள் உப்பை வைத்து, பாசிட்டிவ்வாக நினைத்தாலோ அல்லது பேசினாலோ உடம்புக்குள் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிவிடும்.

இது, மாயமோ, மந்திரமோ இல்லை; முற்றிலும் அறிவியல்.

உடம்பில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி, பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே, அதிர்வுகளாக வெளியில் வந்து எதிராளியிடம் சென்று, அவரது அணுகுமுறையை பாசிட்டிவ்வாக மாற்றும்.

அதனால் தான், இன்றைக்கும் கிராமங்களில், உப்பை மட்டும் ஓசி வாங்கக் கூடாது என்று சொல்வர். அப்படியே வாங்கினாலும் கையில் வாங்க மாட்டார்கள். காரணம், உப்பை கொடுப்பவர்களிடம் உள்ள நெகட்டிவ் எனர்ஜி வாங்குவோருக்கு வந்து விடும் என்ற உண்மையை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது தான்!

சி.பி.செந்தில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us