PUBLISHED ON : ஜூன் 07, 2020

நம்மில் பலருக்கு, கை மற்றும் கால் விரல்களில், நகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர்ந்தாலே, அசவுகரியமாக இருக்கும். முதலில் அதை வெட்டிப் போட்டு விட்டுத் தான், மறுவேலை பார்ப்போம்.
அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சேர்ந்த அரிந்தா ஸ்டோர்ம், 58, என்ற பெண், அளவுக்கு அதிகமாக வளர்ந்த கால் விரல் நகங்களையே மூலதனமாக்கி, லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
இந்த பெண், 16 ஆண்டுகளாக, கால் விரல் நகங்களை பராமரித்து, வளர்த்து வருகிறார். தற்போது இவரது நகங்கள், 7 அங்குல நீளம் உள்ளன.
'கால் விரல் நகங்களை நீளமாக வளர்த்து, பராமரிப்பது எப்படி?' என, 'வீடியோ கால்' மூலமாக, விருப்பம் உள்ளவர்களுக்கு, 'டிப்ஸ்' தருகிறார். 10 நிமிட வீடியோவுக்கு, 1,200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்.
வருமானம் அதிகமாக வருவதால், தான் பார்த்து வந்த அரசு வேலையையும் ராஜினாமா செய்து விட்டார்.
ஜோல்னாபையன்
