/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இடுப்பு சிறுப்பதற்கு இப்படி ஒரு விபரீதம்!
/
இடுப்பு சிறுப்பதற்கு இப்படி ஒரு விபரீதம்!
PUBLISHED ON : ஜூலை 14, 2013
உலகில் உள்ள, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை உண்டு. அதில், சிலரின் ஆசை, நியாயமானதாகவும், ஒரு சிலரின் ஆசை விபரீதமானதாகவும் இருக்கும். இதோ, இந்த படத்தில் காட்சி அளிக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த, 24 வயதான, மைக்கேல் கோபெக் என்ற பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ஆசை, இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
உலகிலேயே, மிகக் குறுகிய இடையுள்ள பெண்ணாக வேண்டும் என்பது இவரது ஆசை. தற்போது, கெத்தி ஜங் என்பவர் தான், உலகிலேயே, மிக குறுகிய இடையுள்ளவர். இவரது இடையின் அளவு, 34 செ.மீ., தான். அவரை விட, குறைந்த இடையுள்ள பெண்ணாக வேண்டும் என்பதற்காக, சில விபரீத முயற்சிகளில் இறங்கியுள்ளார், மைக்கேல் கோபெக்.
இடையை இறுக்கும், 'கார்செட்' என்று அழைக்கப்படும், மிக இறுக்கமான உடைகளையே எப்போதும் அணிகிறார். இதன் காரணமாக, 64 செ.மீ., ஆக இருந்த, இவரது இடை தற்போது, 54 செ.மீ.,ஆக குறைந்துள்ளது. இதை, மேலும் குறைக்க வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து, கடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இறுக்கமான உடை அணிவதால், இவரால், சரியாக சாப்பிட முடிவது இல்லை. ஏன், மூச்சை கூட சரியாக விட முடியவில்லை. இதனால், உயிருக்கே ஆபத்து ஏற்படலாம், என, டாக்டர்கள் எச்சரித்தும், மெல்லிடை மீது கொண்ட ஆர்வத்தால், தொடர்ந்து, இறுக்கமான உடைகளைத் தான், அணிகிறார் மைக்கேல் கோபெக்.
— ஜோல்னாபையன்.