PUBLISHED ON : ஜூன் 14, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரான் நடிகை, கோல்ஷிபித் பர்ஹானி, வயது, 31. சமீபத்தில் இவரது தந்தையும், பிரபல இயக்குனருமான பெஹ்சாதுக்கு, 'அவளுடைய அழகிய மார்பகங்களை அறுத்து, தட்டில் வைத்து, உன் முன் வைப்பேன்...' என்று ஒரு மிரட்டல் போன் வந்தது.
பிரான்ஸ் நாட்டில் வெளிவரும், 'எகோயிஸ்ட்' என்ற பத்திரிகையின் அட்டையில், பர்ஹானியின் நிர்வாண படம் வெளிவந்தது தான், இந்த மிரட்டலுக்கு காரணம். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, தற்போது தன் கணவருடன், பிரான்ஸ் நாட்டுக்கு குடியேறியுள்ளார் நடிகை.
— ஜோல்னாபையன்.

