sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தவமாய் தவமிருந்த தாய்களின் விழா!

/

தவமாய் தவமிருந்த தாய்களின் விழா!

தவமாய் தவமிருந்த தாய்களின் விழா!

தவமாய் தவமிருந்த தாய்களின் விழா!


PUBLISHED ON : ஜூலை 21, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 21 - ஆடித் தபசு

இள வயது மகனோ, மகளோ வீட்டிற்கு அடங்காமல் நடந்தால், பெற்றவர்கள் வாயில் வரும் சொற்றொடர், 'இதுக்கா உன்னை தவமிருந்து பெத்தோம்...' என்பது தான்.

இவர்கள், எங்கே தவமிருந்தனர்? முனிவர்கள் வேண்டுமானால், காட்டில் போய், சில கோரிக்கைகளை முன் வைத்து தவமிருந்ததாக புராணங்களில் படிக்கிறோம்.

தான் பெற்ற சாபத்தால், மீண்டும் கணவனை அடைய தவமிருந்தாள், பார்வதி தேவி. இன்னொரு வரலாற்றின்படி, தன் கணவரான சிவனையும், அண்ணனான திருமாலையும் ஒரு சேர தரிசிக்க விரும்பி, தவமிருந்தாள். அவர்கள் இணைந்து, சங்கரநாராயணராக காட்சி தந்தனர். அவளது தவத்தை தபஸ் என்பர். இதையே ஆடித் தபசு விழாவாகக் கொண்டாடுகிறோம்.

ஆனால், நம்மைப் பெற்றவர்களும் தவமிருந்தனர். எப்போது?

தாயின் வயிற்றில் கரு ஜனித்த நாளிலிருந்து, அந்த குழந்தையை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர வேண்டும்; தன் தாய், தந்தை, மாமியார், மாமனாரை தாத்தா, பாட்டியாக்க வேண்டும்.

தன் கணவருக்கு, தந்தை ஸ்தானம் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தாய் என்ற பெரும் பதவியை தான் அடைய வேண்டும் என்பதற்காக, 10 மாதம் வயிற்றில் சுமக்கிறாள், அவள்.

அப்போது, அவள் நினைவெல்லாம் வயிற்றில் இருக்கும் சிசுவிடம் தான் இருக்கும். அன்றாட வேலைகளைச் செய்தாலும், வயிற்றுக்குள் இருக்கும் அந்த சிசுவின் மீதான கவனம் மட்டும் மாறாது. துாங்கும்போது, அப்படியே திரும்பி படுக்க மாட்டாள். மெதுவாக எழுந்து, துாக்கத்திலிருந்து விழித்து, மாறி மாறி படுப்பாள். இதுதானே நிஜமான தவம்.

அந்த சமயத்தில், அவளுக்கு ஆதரவாக இருப்பான், அவளது கணவன். வாந்தி எடுத்து சோர்ந்து விடும் அவளை, கைத்தாங்கலாக அழைத்து வருவான். அவள் விரும்பியதை ஊட்டி விடுவான். எவ்வளவு செலவழிக்கவும் தயங்க மாட்டான்.

இப்படி, அவனது கவனமும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை மீதே இருக்கும். பிரசவ வலியில் அவள் துடிக்கும்போது, அவளை விட அதிகமாக அவன் துடிப்பான்.

உலக விஷயங்களிலிருந்து மனதை திருப்பி, ஏதோ ஒன்றின் மீது கவனம் வைப்பதையே, தவம் என்கிறோம். கர்ப்ப காலத்தில், ஒரு தாய், தந்தையின் கவனம், தங்கள் சிசு மீதே இருக்கிறது. இதுதான் தவம்.

இப்படி கஷ்டப்பட்டு, பிறந்த பிள்ளை திசை மாறிப் போகும்போது, 'இதற்கா உன்னை தவமிருந்து பெற்றோம்...' என, புலம்புகின்றனர்.

லோக மாதாவான பார்வதி மட்டுமல்ல, ஒவ்வொரு தாயும் தவமிருந்தவள் தான். அந்த தாயை வணங்கும் திருநாள் தான், ஆடித் தபசு. இந்த விழாவன்று, பெற்றவளை வணங்கி, அவள் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என்பது தான், நம் உறுதிமொழியாக இருக்க வேண்டும்.

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us