
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயதாகிவிட்டதே என்று கவலைப்படாமல், சுறுசுறுப்பாக செயல்பட்டால், முதுமையை இளமையாக்கலாம் என்று நிரூபித்து இருக்கின்றனர், பலர். தமிழக கிராமமான குறும்பபட்டி வாசியான, வளர்மதி, இப்போது, பாலக்காடு, வென்மறையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சிறு வயதிலிருந்தே, சைக்கிள் ஓட்டுவதை மிகவும் விரும்பிய இவர். பள்ளி பருவத்தில் தினமும், 15 கி.மீ., சைக்கிள் மிதித்து தான் பள்ளிக்கு போய் வருவாராம். இப்போது, வயது, 55 கடந்தாலும், சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை விட்டு விடவில்லை.
அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து, வெளியில் சென்றால், சைக்கிளில், பல கி.மீ., துாரத்தை கடந்து வீட்டுக்கு வருகிறார்.
அம்மாவின் இந்த ஆர்வத்தை கண்டு, இவருக்கு நவீன மாடல் சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்து, உற்சாகப்படுத்தி உள்ளனர், இவரது மகன்கள்.
—ஜோல்னாபையன்