தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/24வது ஜேம்ஸ்பாண்ட் படம் ரெடி!

24வது ஜேம்ஸ்பாண்ட் படம் ரெடி!

24வது ஜேம்ஸ்பாண்ட் படம் ரெடி!


PUBLISHED ON : ஜன 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரசிகர்களின் காதுகளில் முழம் முழமாக பூவைச் சுற்றும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இன்னும் கிராக்கி இருக்கத் தான் செய்கிறது. இதுவரை, 23 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளன. ரோஜர் மூர், சீன் கானரி, பியர்ஸ் பிராஸ்னன் போன்றோர், இதுவரை ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கடைசியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், டேனியல் கிரேக், ஜேம்ஸ்பாண்டாக நடித்த, ஸ்கைபால் படம் வெளியானது. தற்போது, ஸ்பெக்டர் என்ற பெயரில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம் ரெடியாகி வருகிறது.

இதிலும், டேனியல் கிரேக் தான், ஜேம்ஸ்பாண்டாக அசத்த காத்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹாலிவுட் கவர்ச்சி புயல், மோனிகா பெலுச்சி நடிக்கிறார். வழக்கமாக, ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கார்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த படத்திலும், ஒன்பது வகையான கார்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஆஸ்டன் டிபி 10 மாடல் காரில், டேனியல் கிரேக், பலவகையான வித்தைகளை செய்யப் போகிறார். இந்தாண்டு நவம்பரில் வெளியாகவுள்ள இந்த படத்துக்காக, ரசிகர்கள் இப்போதே காத்திருக்கின்றனர்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us