PUBLISHED ON : பிப் 09, 2014

அ நிறம் | அளவு
ஹாலிவுட் திரைப்படங்களில், சண்டை காட்சிகளில், கார்கள் பல்டி அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில், இது, ரொம்ப சிரமமான காரியம். கார் பந்தய வீரர்களால் கூட, காரை பல்டி அடிக்க வைக்க முடியாது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த, 34 வயதான குயர்லென் சிக்செரிட் என்பவர், இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். ஆல்ப்ஸ் மலைத் தொடரில், பனிக் கட்டியால் ஆன, சறுக்கல் மேடையை அமைத்து, அதில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் காரை செலுத்தி, 75 அடி உயரத்தில், காரை பல்டி அடிக்கவிட்டு, இந்த அசத்தலான சாதனையை, அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு, நான்கு ஆண்டுகள், கடினமாக பயிற்சி மேற்கொண்டார்.
— ஜோல்னா பையன்.
