மணிகளும், வளையல்களுமே திரும்பிப் பார்க்க வைக்குமாம்!
மணிகளும், வளையல்களுமே திரும்பிப் பார்க்க வைக்குமாம்!
PUBLISHED ON : செப் 02, 2018

அ நிறம் | அளவு
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ளது, கென்யா நாடு; காட்டு விலங்குகள், பூங்காக்கள் மற்றும் ஏராளமான மலை இனத்தினரும் நிரம்பிய நாடு இது.
இங்கு, 43 வகையான மலை இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், துர்கானா என, ஒரு மலை இன பிரிவில் உள்ள பெண்கள் பிறந்தது முதல் எப்போதும் கழுத்தில் ஏராளமான மணிகள் மற்றும் கையில் வளையல்கள் அணிந்திருப்பர். இவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ, உறவினர்கள் யாராவது இறந்தாலோ தான் இவற்றை கழற்றுவர்.
மணிகள் மற்றும் வளையல்கள் அணியவில்லையென்றால், ஆண்கள், இவர்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்களாம்; ஒதுக்கி வைத்து விடுவராம்.
- ஜோல்னா பையன்.
