PUBLISHED ON : மார் 19, 2017

அ நிறம் | அளவு
வாகனங்கள் மற்றும் வாகனம் சம்பந்தமான அனைத்து துறைகளிலும், ஆண்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர். ஆனால், உலகில், முதன் முதலில் காரை ஓட்டியது ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா?
உலகில் முதல் காரை கண்டுபிடித்த, காள் பென்சின் மனைவி பெர்த்தா தான், அந்த சாதனைப் பெண். கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில், தன் இரு குழந்தைகளுடன், சைக்கிள் போன்று காணப்படும் இந்தக் காரை ஓட்டி செல்வார்.
ஆக., 5, 1888ம் ஆண்டு, காலையில், ஜெர்மன், மான்கெயிம் சாலையில் ஓடிய இக்காரை கண்டு, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மெதுவாக இயங்கும் இக்காரில் தான், 100 கி.மீ., தொலைவில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு, பயணமானார், பெர்த்தா.
— ஜோல்னாபையன்.
