PUBLISHED ON : ஆக 27, 2023

மூன்று முறை கேரளா முதல்வராக இருந்து, சமீபத்தில் காலமான, உம்மன் சாண்டி, எளிமையாக வாழ்ந்தவர். இவர் அணிவதற்காக, நான்கைந்து சட்டை மற்றும் வேட்டிகள் மட்டுமே வைத்திருந்தார்.
ஒருநாள் காலை, கோட்டயம், புதுப்பள்ளியிலிருந்து திருவனந்தபுரம் செல்ல இருந்தார்; நான்கு மணி நேர பயணம். துணி துவைத்து தரும் சலவை தொழிலாளி வீட்டில் மரணம் நேர்ந்ததால், சலவைக்கு சென்ற இவரது ஆடை, வந்து சேரவில்லை.
புறப்படும் நேரம் நெருங்கியதும், நண்பர் ஒருவரின் சட்டையை இரவலாக பெற்று, அதை அணிந்து கிளம்பினார். அந்த சட்டை, பெரிய அளவில் இருந்தது. அதை அணிந்து வேட்டியை துாக்கி பிடித்தபடி, காரிலிருந்து சட்டசபைக்குள் ஓடினார்.
கடவுள் பக்தி மிகுந்த இவர், வாரம் தவறாமல் வீட்டு அருகே உள்ள சர்ச்சுக்கு வந்து விடுவார். பிரார்த்தனை நடைபெறும்போது, சாதாரண மனிதனை போல தரையில் உட்கார்ந்து ஆராதனை செய்வார்.
— ஜோல்னாபையன்
