PUBLISHED ON : மார் 20, 2022

அ நிறம் | அளவு
'சக்களத்தி சண்டைன்னா என்ன?' என்று கேட்கிறார், கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவை சேர்ந்த ஜோசப். இவருக்கு இரு மனைவியர். இங்குள்ள பழங்குடி இன மக்கள் வித்தியாசமான ஆசாரங்களை பின்பற்றுகின்றனர்.
'இங்கு, 15 வயது சிறுமியர் கூட, தாயாகி விடுவர். இதை யாரும் தவறாக நினைப்பதில்லை. கர்ப்பமானால், விருப்பம் இருந்தால் அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையேல் வேறு யாரையாவது திருமணம் செய்வதற்கும் தடை இல்லை.
'ஒருவர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். மனைவியர் எத்தனை பேர் இருந்தாலும், சக்களத்தி சண்டை எல்லாம் கிடையாது...' என, ஜோசப்பும், அவரின் இரு மனைவியரும் கூறுகின்றனர்.
ஜோல்னாபையன்
