
'ரீமேக்' ஆகும் குற்றம் கடிதல்!
ஜெயம் ரவி நடித்துள்ள, தனி ஒருவன் படம், தெலுங்கு மற்றும் இந்தியில், 'ரீமேக்' ஆவதைத் தொடர்ந்து, புதுமுக நடிகை, ராதிகா பிரசித்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள, குற்றம் கடிதல் படமும், இந்தி மற்றும் மராட்டிய மொழிகளில், 'ரீமேக்' ஆகிறது.
காக்கா முட்டை படம் போன்று, திரைக்கு வருவதற்கு முன்பே, பல விருதுகளை வாங்கியுள்ள, குற்றம் கடிதல் படத்தை பார்த்த, இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர், ராதிகா பிரசித்தா நடித்த கதாபாத்திரத்தில், தான் நடிக்க தயாராக இருப்பதாக, அப்படத்தை இந்தியில் தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
பாகுபலி 2வில் அனுஷ்காவுக்கே முக்கியத்துவம்!
பாகுபலி படத்தின் முதல் பாகத்தில், அனுஷ்காவை கைதி போல தான் காண்பித்தனர். மாறாக, ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்தனர். ஆனால், தற்போது தயாராகும், பாகுபலி 2வில் அனுஷ்கா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன், தற்போது, அவர் நடித்து, ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும், ராணி ருத்ரம்மா தேவி போன்று, பாகுபலி 2விலும், சரித்திர காலத்து குதிரையேற்றம் மற்றும் வாள் சண்டை போடுகிறார். வேலைக்குத் தகுந்த வேஷம்!
— எலீசா
ராதிகா ஆப்தே துணிச்சல் யாருக்கு வரும்?
கபாலி படத்தின் நாயகியான ராதிகா ஆப்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. பெனடிக் டெய்லர் என்ற அவரது கணவர், லண்டனில் இருக்கிறார். அதனால், சமீபத்தில், தன், 30வது பிறந்த நாளை கொண்டாட, லண்டன் சென்றிருந்த ராதிகா ஆப்தே, அந்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ந்தார். மேலும், தனக்கு திருமணமாகி விட்டது என்ற செய்தி, ரசிகர்களுக்கு தன் மீதான இமேஜை குறைத்து விடும் என்றும் கவலைப்படவில்லை. காரணம் கேட்டால், 'என்னைப் பற்றி ஆபாச வீடியோக்கள் வெளியிட்டு, என் இமேஜை கெடுத்ததை விடவா, இது கெடுத்து விடப் போகிறது...' என்கிறார். எல்லாத் தாட்டோட்டும் என் குல்லாய்க்குள்ளே!
— எலீசா
அஜித்துக்கு விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்!
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், முன்னதாக, வேதாளம் என்றொரு படத்தில் நடிக்கயிருந்தார். ஆனால், அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அஜித்தின், 56வது படத்திற்கு, வேதாளம் என்று தலைப்பு வைக்க முடிவு செய்த போது, அப்படத்தின் இயக்குனர் சிவா, லாரன்சிடம் கேட்டார். அப்போது, எவ்வித தயக்கமும் இன்றி, 'வேதாளம் தலைப்பை, அஜித் படத்துக்கு தாராளமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்...' என்று விட்டுக் கொடுத்தார் லாரன்ஸ். இதையடுத்து, அஜித் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தாராவுடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் இளம் இயக்குனர், நடிகையுடன் நீண்ட நாட்கள் பயணிக்க வேண்டும் என்பதற்காக, அப்படத்தின் படப்பிடிப்பை வேண்டுமென்றே நீட்டிக் கொண்டு வந்தார். இச்செய்தி, அப்படத்தை தயாரிக்கும், சுள்ளான் நடிகரின் காதுக்கு செல்ல, செம டென்ஷனாகி விட்டார். சில நாட்களை கூறி, 'இதற்குள் இந்த படத்தை முடிக்காவிட்டால், அதற்கடுத்து படப்பிடிப்பு நடக்கும் ஒவ்வொரு நாள் செலவையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும்...' என்று கூறி விட்டார். சுள்ளானின் இந்த கண்டிஷனால், ஆடிப் போயுள்ளார் தாரா நடிகையின் மூன்றாவது காதலர்.
ஓரேழுத்து படத்தில் நடித்த லண்டன் நடிகை, படப்பிடிப்பு தளத்திலேயே சரக்கடிக்கிறார். அதற்கு இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், 'நான் எத்தனை, 'பெக்' அடிச்சாலும், அடிச்ச மாதிரியே தெரியாது; அதனால, நீங்க கவலைப்பட வேணாம்...' என்று, 'புல்' போதையிலும் 'ஸ்டெடி'யாக நின்று நடித்துக் கொடுக்கிறார்.
சினி துளிகள்!
* மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் ஒரு புதிய படத்தில், ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா.
* சண்டி வீரனை தொடர்ந்து, ருக்குமணி வண்டி வருது என்ற படத்தில் நடிக்கிறார் அதர்வா.
* வி.ஐ.பி., 2 படத்தில் தனுஷுடன் நடித்துள்ள எமிஜாக்சன், அடுத்து, அட்லி இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.