தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரதிராஜாவின் திரைப்படக்கல்லூரி!

தான் கற்ற சினிமாவை, வருங்கால சந்ததியினருக்கு கொடுக்கும் வகையில், 'இன்டர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சினிமா' என்ற பெயரில், திரைப்பட கல்லூரி துவங்குகிறார் பாரதிராஜா. நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டை மற்றும் நடன பயிற்சி என, அனைத்து துறைகளை சேர்ந்த நிபுணர்களை வைத்து, இப்பயிற்சிகள் பாரதிராஜாவின் தலைமையில் கொடுக்கப்பட உள்ளது; இதில், மணிரத்னம், மகேந்திரன், சுகாசினி மற்றும் வைரமுத்து ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

சினிமா பொன்னையா

'இமேஜ்' பற்றி கவலைப்படாத ஜி.வி.பிரகாஷ்குமார்!

பாலா இயக்கும், நாச்சியார் படத்தில், பச்சிளம் குழந்தை உட்பட, ஒன்பது பேரை கொலை செய்யும் கொடூர வில்லனாக நடிக்கிறார், ஜி.வி.பிரகாஷ். 'கதாநாயகனாக நடித்து வரும் நேரத்தில், இம்மாதிரி வில்லனாக நடித்தால், 'இமேஜ்' பாதிக்குமே...' என்று அவரிடம் சினிமா நண்பர்கள் கேட்டதற்கு, 'இயக்குனர் பாலா படத்தில் வில்லனாக நடித்தாலும், நடிப்பில் பட்டை தீட்டப்படுவோம்; அதனால், என் நடிப்பாற்றல் இன்னும் மெருகேறும் என நினைக்கிறேன். அதனால், 'இமேஜ்' பாதித்தாலும், கவலைப்படவில்லை...' என்கிறார்.

சி.பொ.,

நயன்தாராவுக்கான கதையில் காஜல் அகர்வால்!

தற்போது, இமைக்கா நொடிகள், அறம், வேலைக்காரன் மற்றும் கொலையுதிர் காலம் என, பல படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்நிலையில், கவலை வேண்டாம் படத்தை இயக்கிய, டி.கே., நயன்தாராவுக்காக, ஒரு திகில் கதையை தயார் செய்து, அவரிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால், பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அப்படத்தை ஏற்க மறுத்து விட்டார் நயன்தாரா. அதன் காரணமாக, தற்போது, அக்கதையில் நடிக்க, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார், டி.கே., த்ரிஷா மற்றும் நயன்தாராவை தொடர்ந்து, காஜல் அகர்வாலும், கதையின் நாயகியாகிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!

எலீசா

சமுத்திரகனியின் இலவச ஆம்புலன்ஸ்!

தொண்டன் படத்தில், சமூக சேவை செய்யும் தொண்டனாக நடிக்கிறார், சமுத்திரகனி. கதைப்படி, இப்படத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்பவராக நடித்துள்ளவர், இப்படம் வெளியாகும் போது, சில அரசு மருத்துவமனைகளுக்கு, இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி தரவும் முடிவு செய்துள்ளார். அதேபோல், இப்படத்தின் ஆம்புலன்ஸ் கார் கிளீனராக நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பும், அரசு மருத்துவமனைகளுக்கு, இரண்டு ஆம்புலன்ஸ் வாங்கித் தர இருக்கிறார்.

—சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

* பீட்சா நடிகருடன், நேசம் வளர்த்து வந்த காக்கா முட்டை நடிகை, சமீபகாலமாக, தன் ரூட்டை மாற்றி வருகிறார். காரணம், நடிகரின் கவனம், வேறு நடிகைகள் பக்கம் திரும்பி விட்டது தான். மேலும், நடிகர், தனக்கு சிபாரிசு செய்வதையும் நிறுத்தி விட்டதால், கடுப்பில் இருக்கும் நடிகை, அந்த நடிகரின், கடந்த கால நிகழ்வுகளை சொ ல்லி, வதந்தி பரப்பி வருகிறார்.

* யாராவது பட விஷயமாக அணுகினால், மும்பையில் இருந்தபடி, 'தேவை என்றால் மும்பைக்கு வந்து கதை சொல்லுங்கள்...' என்று கூறி வந்த பையா நடிகைக்கு, தற்போது சரியாக படங்கள் இல்லை. அதனால், யாராவது பட விஷயமாக பேசினால், அடுத்த நாளே, சென்னைக்கு ஓடோடி வந்து, கதை கேட்பதுடன், அவர்களுக்கு விருந்து கொடுத்தும் அசத்துகிறார்.

சினி துளிகள்!

* 'கேட்ச்' என்ற படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.

* அஜித்தின், விவேகம் படத்தில், புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்துள்ளார், கமலின் மகள் அக் ஷரா ஹாசன்.

* வேலைக்காரன் படத்தில், நயன்தாரவுக்கு, சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடம் கொடுத்து உள்ளார், இயக்குனர் மோகன் ராஜா.

* தமிழை தொடர்ந்து, மலையாள படங்களில், பிசியாக நடித்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us