தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !


PUBLISHED ON : அக் 03, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமண பந்தியில் உட்கார வேண்டிய இடம்!

அதிகாலை முகூர்த்த திருமணத்திற்கு சென்றேன். காலையிலேயே எழுந்ததால், பசி காதை அடைத்தது. மணப்பெண்ணின் கல்லூரி தோழிகள் கூட்டத்துடன் சென்று பந்தியில் அமர்ந்தேன். எல்லாருமே ஸ்டைல், 'மிசி'கள். பரிமாறுபவன் எது கொண்டு வந்தாலும், 'லிட்டில் போதும்... வேண்டாம்... ஒரே ஒரு இட்லி போதும்...' என்றனர். இதனால், அவர்களுடன் அமர்ந்திருந்த எனக்கும் சரியாகவே பரிமாறவில்லை. கரண்டியில் கடைசியாக ஒட்டி இருந்த கொஞ்ஜூண்டு பொங்கல், தம்மாத்துண்டு கேசரி, பானிபூரி சைசில் பூரி, இட்லி ஒன்று என்று தான் கிடைத்தது. எனவே, அரை வயிறு தான் நிரம்பியது. 'இன்னொரு இட்லி, பூரி கொடுங்க...'ன்னு கேட்க வெட்கமாக இருந்தது. இந்த ஸ்டைல், 'மிசி'கள், அதிலும் பாதியை வைத்துவிட்டு, 'ஐ கான்ட் ஈட் யா...' என ஸ்டைலாக தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றனர். நான் என் கணவரிடம், 'பாதி வயிறு கூட நிரம்பல...' என்று சொன்னதும், என்னை கிண்டல் பண்ணி தீர்த்து விட்டார். 'அதற்கு தான், நல்லா சாப்பிடுற பார்ட்டிகளுக்கு பக்கத்தில் உட்காரணும். அவர்களே சர்வர்களை மிரட்டி, 'தம்பி... இப்படி வா... இரண்டு இட்லி வை, பூரி வை...'ன்னு கேட்டு வாங்கி, எதிர் பந்தியில் உட்கார்ந்திருப்பவரின் முகத்தைக் கூட பார்க்காமல், வழிச்சி, வழிச்சி சாப்பிடுவாங்க. அப்படியே, பக்கத்திலிருக்கும் உன்னையும் சர்வர் கவனிப்பான்... பிரச்னை தீர்ந்து விடும்!' என்றாரே பார்க்கலாம். அடுத்த திருமணத்தில், 'ட்ரை' பண்ணலாம்ன்னு இருக்கேன்.

— ஆர்.கமலா, புதுச்சேரி.

ஸ்பீட் பிரேக்கரா,  எலும்பு பிரேக்கரா?

வீதியெங்கும் ஸ்பீட் பிரேக்கர்கள் (வேகத்தடை) அவசியம் தான். அப்பக்கம் கலெக்டர், பிறர் என முக்கியமானவர்கள் வந்தால் மஞ்சள், வெள்ளை பட்டைக் கோடுகள் பளிச்சிடுகின்றன. பொதுவாக 99 சதவீதம் அவை அப்படியிருப்பதில்லை. கண் பார்வை மங்கியோர், வயதில் மூத்தவர்கள், சிறு குழந்தைகள், வேகமாக செல்ல வேண்டி யோர், வாக்கிங் போவோர், நோயாளிகள் என பலரும் ஸ்பீட் பிரேக்கர்களால் தடுக்கி, சரிந்து விழுந்து பாதிக்கப்படுவது சகஜமாகி விட்டது. இந்த லட்சணத்தில் ஸ்பீட் பிரேக்கர்களை வராமல், வரும் வேகத்திலேயே, ரோடின் ஓரமாக வந்து அச்சுறுத் தும் டூ வீலர், ஆட்டோ ஓட்டிகள் வேறு!

எல்லாரும், எப்போதும், கவனமாக பார்த்து நடக்க வேண்டும் என்கின்றனர்;  நியாயம்தான். அதே சமயம், சமூக சேவையாகவும், நியாய மாகவும் ஸ்பீட் பிரேக்கர் களுக்கு மஞ்சள், வெள்ளை பட்டைக் கோடுகள் அடிப் பதிலும் தவறு ஒன்று மில்லையே!

— பி.பத்மாவதி,  கோவை.

நமக்கு எச்சரிக்கை தேவை!

ஒருநாள் காலை ஏழு மணி அளவில் எங்கள் தெருவுக்கு ரோந்துப் பணிக்கு வந்த காவலர், என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நடுத்தர வயது உடைய பெண்மணி ஒருவர், மொபைல் போனில் பேசிக் கொண்டே சென்றார். அதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் இன்னொரு இளவயது பெண் மொபைல் போனில் பேசிக் கொண்டே நடந்து சென்றார். சில நிமிடங்கள் கழித்து இன்னொரு பெண் மொபைல் போனில் பேசிக் கொண்டே சென்றார். இதைக் கண்ட அந்த காவலர், என்னிடம் கூறியது அதிர்ச்சியாக இருந்தது... 'சார்... இப்படி மொபைல் போன்ல பேசிக் கொண்டே போறாங்களே... பின்னால யாராவது சைக்கிள்ல வந்து அதைப் பிடுங்கிக் கொண்டு போனால் இவங்க என்ன செய்வாங்க? இப்படி தெருவுல மொபைல் போன்ல பேசிக் கிட்டே போறது ரொம்ப அவ சரமா, இல்லே தேவைதானா? நாமே திருடர்களுக்கு எளிதா திருட வழிமுறைகளை ஏற்படுத்தி தராம ஜாக்கிரதையாய் இருக் கணும்...' என்றார். அவர் சொன்னது எனக்கு சரியென்றே தோன்றியது. நாமும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டியது அவசியம் தானே!

  —  கே.ராமச்சந்திரன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us