தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 25, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உறவினரின் எச்சரிக்கை!

வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு சென்ற உறவினர் ஒருவர், பல ஆண்டுகளுக்குப் பின், சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு தேடிச் சென்று, உறவையும், நட்பையும் புதுப்பித்துக் கொண்டார்.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த பரிசுப் பொருட்களுடன், 'பென் டிரைவ்' ஒன்றை கொடுத்து, அதிலுள்ள வீடியோக்களை பார்க்குமாறு கூறினார். வீடியோவில், அவரும், அவரைப் போன்ற பலரும், எவ்வளவோ சிரமங்களுக்கிடையில், கடின உழைப்பைக் கொடுத்து, குடும்பத்திற்காக தங்களைத் தியாகம் செய்திருக்கின்றனர் என்பதை, காட்சிகள் மற்றும் உரையாடல்கள் வாயிலாக, அழுத்தமாக உணர்த்தியிருந்தார்.

சொந்த பந்தங்களையும், ஊரையும் பிரிந்து, வெளிநாடுகளில் பணிபுரியும் ஒவ்வொருவருமே, உள்ளே அழுது, வெளியே சிரித்து இரட்டை வேட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது, அதைப் பார்த்த பின் புரிந்தது.

குறைந்த ஊதியமே என்றாலும், குடும்பத்தோடு சேர்ந்து, மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையே போதும் என்பதை, ஆழமாக மனதில் பதிய வைத்தது, அந்த வீடியோ. வெளிநாட்டு மோகத்தில் மூழ்கி, உறவினர்களும், நண்பர்களும் வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், 'பென் டிரைவ்' மூலம் வீடியோவில், எச்சரிக்கை செய்த உறவினரை, மனதார பாராட்டினோம்!

-மு.ஆதினி, சேலம்.

பழைய பேப்பர் கடைக்காரரின் சமூக சேவை!

வீட்டிலிருந்த பழைய செய்தித்தாளை எடைக்கு போட, கடைக்கு சென்றேன். கடையின் ஒருபுறம், பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் என, தனித் தனியே அடுக்கி வைத்திருந்தார், கடைக்காரர். அவைகளை எடுத்து புரட்டினேன்.

'அதெல்லாம் விற்பனைக்கு இல்ல, சார். பள்ளிக்கூடம், காலேஜ் படிக்கிற ஏழை பிள்ளைகள் மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்கிற பிள்ளைகளுக்கு இலவசமா கொடுக்க வெச்சுருக்கேன். 'உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் யாராவது இருந்தால், கொண்டு போய் கொடுங்கள். எதோ என்னால் இயன்ற சின்ன சேவை...' என்றார், கடைக்காரர்.

சமூக சேவை செய்ய, கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. கொஞ்சம் மனம் இருந்தால் போதும் என்பதை உணர்த்தியது, கடைக்காரரின் செயல்.

ரா. சாந்தகுமார், கூடுவாஞ்சேரி, சென்னை.

வேண்டாம் ஆபத்தான மேக் - அப்!

நண்பர் மகளின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த சின்ன பெண்ணுக்கு, வீட்டில் இருந்தவர்கள், கண் இமை ஓரம் சின்ன சின்ன வெள்ளை நிற பூக்களை ஒட்டி, 'மேக் - அப்' போட்டுக் கொண்டிருந்தனர். அது என்ன பூ என்று கேட்டதற்கு, விஷச் செடியான, பார்த்தீனியப் பூவை எடுத்துக் காட்டினர்.

அதைப் பார்த்ததும் அதிர்ந்து, 'பார்த்தீனியம், கொடுமையான விஷத் தன்மை வாய்ந்தது. இதன் மீது பட்டு வரும் காற்றை நாம் சுவாசித்தால் கூட, சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என, அரசாங்கமே எச்சரிக்கை விடுத்து, அதை அழிக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்...' என்றேன்.

உடனே, நண்பனின் அம்மா, 'அப்படியா, இது எங்களுக்கு தெரியாதே. 'யூ டியூபில்' வீடியோ பார்த்தேன். அதில் இதைத்தான் காட்டினர். அதான் இப்படி செய்தோம்...' என்றார். 'யூ டியூபில் வீடியோ பார்த்து சமைப்பது, 'மேக் - அப்' போடுவது, மருத்துவ குறிப்புகளை பின்பற்றுவது என, எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்காதீர்கள். அதில், பல மோசமான வீடியோவும் உண்டு...' என்றேன்.

'நல்லவேளை, சொன்னீர்கள்...' என, உடனடியாக முகத்தை கழுவியபின், ரொம்ப சிம்பிளாக, 'மேக் - அப்' செய்ததும், குழந்தையும் அழகாக இருந்தது. குழந்தைகள் எல்லாம் இயற்கையாகவே அழகு தான். அதற்கு எதற்கு, 'மேக் - அப்!'

பா.பரத், சிதம்பரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us