sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 25, 2011

Google News

PUBLISHED ON : செப் 25, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேற இடம் கிடைக்கலையா?

பிளஸ் 2 முடித்த என் மகனின் கலந்தாய்வுக்காக, சென்னைக்கு வந்திருந்தோம். இரண்டு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலையில், சென்னையிலுள்ள, 'ஷாப்பிங் மால்'களைச் சுற்றிப் பார்த்தோம்.

ஷாப்பிங் மால்களில் உலவிக் கொண்டிருந்த மாடர்ன் யுவதி களை, என் மகன் ஒரு மாதிரியாக வெறித்து, வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான். வயசுக் கோளாறு காரணமாக, பெண் பிள்ளை களை, 'சைட்' அடிக்கும் பார்வையாக அது இல்லாததால், அவன் பார்வை போன திசையை கவனித்து அதிர்ந்தேன்.

கழுத்துக்குக் கீழ், நிறைய இறக்கம் வைத்த, 'லோ கட்' டாப்ஸ் அணிந்த யுவதிகள், தங்களின் நெஞ்சுப் பகுதியில், பல வண்ண, 'டாட்டூ' - பச்சை குத்தி, அவை வெளியில் தெரியும் வகையில் திரிந்து கொண்டிருந் தனர்.

அந்தப் பிரதேசக் கவர்ச்சிதான், தாய் அருகில் இருப்பதைக் கூட மறக்கச் செய்து, என் பையனின் கவனத்தை திசை திருப்பி, அவன் மனதை சலனப் படுத்திக் கொண்டிருந்தது.

நாகரிகம் என்ற பெயரில், கவர்ச்சி காட்டித் திரியும் இதுபோன்ற யுவதிகளை கண்டிக்க இயலாத நிலையில், என் மகனை அழைத்துக் கொண்டு, இடத்தை காலி செய்தேன்.

டாட்டூ பதிப்பதை, அந்த இடத்தோடு நிறுத்தினார்களோ அல்லது இன்னும் உட்புற பிரதேசங்களிலும் பதிந்திருக்கின்றரோ?

ச்சே... கலி முத்திப் போச்சு!

— வி.காந்திமதி, பாளையங்கோட்டை.

அழகே... உனக்கு எதிரி, 'புலிமியா'!

என் உறவு பெண் ஒருவர், சற்று பருமனாக இருந்தாலும், அழகாக இருப்பாள். அவளை, 'குண்டு... பப்ளிமாஸ்...' என, அவளின் கல்லூரி தோழிகள் கேலி செய்துள்ளனர்.

இதனால், மனம் நொந்த அவள், ஒல்லியாக இருப்பது தான் பெண்ணிற்கு அழகு என்றெண்ணி, 'டயட்' என்ற பெயரில், பட்டினி கிடக்க ஆரம்பித்தாள். வீட்டிலுள்ளவர்கள், வலுக்கட்டாயமாக சாப்பிடச் செய்தாலும், சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து விடுவாள்.

ஒரு நாள், அவள் மயக்கமடைந்ததால், மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக, கல்லூரியில் இருந்து போன் வந்தது. பதறிப் போய் மருத்துவ மனைக்கு சென்ற போது, அவளுக்கு, 'புலிமியா' என்ற நோய் ஏற்பட்டுள்ளதாக, டாக்டர் குண்டை தூக்கிப் போட்டார்.

'சாப்பிட்ட சிறிது நேரத்தில், உணவை தொண்டைக்குள் விரலை விட்டு, வாந்தி எடுப்பதே புலிமியா. இதை, உடல் இளைப்பதற்கான, 'டெக்னிக்' என, சில பெண்கள் கருதுகின்றனர்; ஆனால், உண்மையில் இது ஒரு வியாதி. இப்பழக்கம், நாளடைவில் உணவுப் பொருட்களை பார்த்தாலே குமட்டிக் கொண்டு, வாந்தி எடுக்கும் அளவுக்கு நோயாளியாக்கி விடும்.

'அத்தோடு, வாந்தியால் ஏற்படும், சக்தி இழப்பும் மிக அதிகம். வயிற்றுக்குள் நிரந்தரமாக புண் ஏற்பட்டு, உணவுப் பொருளே ஒவ்வாத நிலை ஏற்படும். உடல் அமைப்பே கேள்விக்குறி போல வளைந்து, தாறுமாறான வடிவத்திற்கு வந்து விடும். கூந்தல் உதிர்ந்து, நகங்களும் உடைய ஆரம்பிக்கும். பற்களும், ஈறுகளும் பாதிப்புக்குள்ளாகி, சுவாசித் தலிலும் துர்நாற்றம் வீசும்...' என, டாக்டர் விளக்கியதை கேட்டதும், அனைவருக்கும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது.

தற்போது அப்பெண்ணிற்கு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இளம் பெண்களே... விபரீதமான வழிகளை விட்டு, விட்டு, உண்மையான அழகின் ரகசியம் என்பது, போதுமான, சத்தான உணவுகள், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.

— ஜெய்னம்பு, கீழக்கரை.

யாரைத்தான் நம்புவது?

சென்னை, தி.நகரிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நகை ஒன்றை வாங்கினோம். அந்த நகைக் கடையில், பி.ஐ.எஸ்., முத்திரை பெற்ற, 'ஹால்மார்க் 916' கே.டி.எம்., நகைகள் விற்கப்படுகின்றன. நாங்கள் வாங்கிய நகையை, 27.94 கிராம் என்றே அங்கு எடை போட்டு காண்பித்தனர்.

ஒரு வாரத்திலேயே, பணத் தேவைக்காக அந்த நகையை, வங்கி ஒன்றில் அடகு வைக்க வேண்டியிருந்தது. அங்கு எடை போட்டு பார்த்ததில், 27.80 கிராம் மட்டுமே உள்ளதாக கூறினர்.

பணம் வாங்கியதும், வீட்டிற்கு வந்து, நகை வாங்கிய பில்லை பார்த்ததும், 14 மி.கி., குறைந்திருந்தது. அன்றைய விலைக்கு, 240 ரூபாய் ஏமாந்து விட்டோம் என்பதும் புரிந்தது. வங்கியிலுள்ள எடை பார்க்கும் எந்திரம் உண்மை என்பதால், அந்த நகைக் கடையில் மோசடி செய்துள்ளனர் என்பது தெரிந்தது.

இப்படி, ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ஏமாற்றினால், அதுவே, அவர்களுக்கு பெரிய தொகை லாபமாக கிடைக்கும். இன்றைய சூழ்நிலையில், யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லை.

— ரா.மகேஸ்வரி, சென்னை.






      Dinamalar
      Follow us