தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாறிவரும் வழக்கங்கள்

என் தோழி, எதையுமே புதுமையாகச் செய்பவள். அவள் பெண்ணின் திரு மணத்திற்கு சென்றிருந்தேன். அவளுக்கு தோழிகள் அதிகம். 'கான்ட்ராக்ட்'டுக்கு விட்டிருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்தாள்.

இரண்டு பேர் வாசலில் நின்று, வருபவர்களை வரவேற்க, இரண்டு பேர் கல்யாண பெண்ணை அலங்கரிக்க, (பியூட்டிஷியன் கிடையாது) இரண்டு பேர் சம்பந்திக்காரர்களை கவனிக்க, இரண்டு பேர் சாப்பாட்டு பந்தி விசாரிக்க என்று வேலை கொடுத்திருந்தாள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால், எங் களுக்கும் செய்ய முடிந்தது. முகூர்த்தம் முடிந்ததும், 'சுதா ரகுநாதனின்' குரலில், 'போஜனம் செய்ய வாருங்கோ...' என்று பிரபலமான பாட்டை ஒலிபெருக்கி மூலம் பெரிதாக வைத்து, அனைவரையும் சாப் பாட்டுக்கு அழைத்தாள்.

கை கழுவும் இடத்தில், ஒரு பெரிய அளவு கைக்குட்டை, அனைவருக்கும் வழங்கப்பட்டது. தாம்பூலப் பையில், கால் கிலோ துவரம் பருப்பு, ஒரு டவல், பெரிய அளவு கோபுரம் மஞ்சள் பொடி டப்பா, ஒட்டுப் பொட்டு, ஒரு சிறிய பவுடர் டப்பா, ஒரு ஹமாம் சோப்பு என்று அசத்தி விட்டாள். உதவியாக இருந்த எங்களுக்கு, வெள்ளி விளக்கு ஸ்பெஷல்.

முன்பே வாங்கி விடுவதால், கல்யாண தேங்காய்கள் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எத்தனை பேர் வெற்றிலை பாக்கு போடுகின்றனர்? காலத்துக்கேற்றவாறு, உபயோகமான பொருட்களாக போட்டு, தாம்பூலப் பை கொடுத்த, தோழியை பாராட்டாதவர் களே இல்லை.

இவ்வளவு பொருட்கள் தர முடியா விட்டாலும், நாமும் உபயோகமாக, கெடாமல் இருக்கும் பொருட்களை போட்டுக் கொடுப்போமே...

இவற்றை, கல்யாணத்திற்கு முன் தினம் அவசர, அவசரமாக போடாமல், ஒரு வாரத்திற்கு முன்பே கூட தயார் செய்து விடலாம் தானே!

மாற்றங்களை ஆதரிப்போமா?

— வேதாம்பாள், புதுச்சேரி.

உங்க வசதியை மட்டும் பாக்காதீங்க!

என் சித்தி குடியிருந்த வீடு, வசதி குறைவு காரணமாக, வாடகைக்கு வேறு வீடு பார்த்து வந்தனர். ஒரு முறை வீடு பார்க்க செல்லும் போது, நானும் கூடவே சென்றிருந் தேன். ஒவ்வொரு வீட்டை பார்த்து, விசாரித்து, ஏமாற்றத் தோடு, இந்த வீடு வேண்டாம் என்று கூறி, திரும்பினார்.

நான் சித்தியிடம், 'ஏன் சித்தி... இந்த வீடு உங் களுக்கு போதுமான வசதி தானே... பிறகு ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை?' என்று கேட்க, அதற்கு என் சித்தி, 'நமக்கு மட்டும் வசதியாய் இருந்தால் போதாது. நம் குடும்பத்தில் எல்லாருக்கும் வசதிப்பட வேண்டும்...' என்றார்; எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒரு வழியாக ஒரு வீட்டை முடிவு செய்து, அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்த போது, 'இந்த வீட்டில் அப்படி என்ன கூடுதல் வசதி...' என, நான் கேட்டேன். அதற்கு என் சித்தி, 'நம் வீட்டில், ஏழாம் வகுப்பு படிக்கும் பொண்ணு இருக்கிறாள். அவளுடன் சேர்ந்து விளையாட, படிக்க, பொழுதுபோக்க, சம வயதுடைய பெண்கள் இங்கே நிறைய பேர் உள்ளனர்; அதுதான், எனக்கு முக்கியம்...' என்றார்.

அத்தோடு, 'சம வயதில் நட்பு கிடைக்கவில்லை என்றால், வயது மூத்தவர்களோடு பழகும் போது, ஒரு சிலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்...' என்றும் விளக்கம் கூறினார். எனக்கும், அவர் சொல்வதிலும் உண்மை இருப்பது புரிந்தது.

— ஆர்.திவ்யா, மதுரை.

ஒரு ரூபாய் தினசரி உதவுங்க!

கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று, நானும், என் மூன்று நண்பர்களும் பேசிக் கொண்டிருந்த போது, 'தினசரி ஒரு ரூபாயாவது மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்...' என, முடிவெடுத்தோம். அதன்படி, நாங்கள் நால்வரும், ஆளுக்கு மாதம், 30 ரூபாய் வீதம், 120 ரூபாயை வங்கியில் முதலீடு செய்து வந்தோம். ஒரு வருட முடிவில், வங்கியில் இத்தொகை, 1,500 ரூபாய் வரை சேர்ந்தது.

இத்தொகையை, மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், எப்படி செலவு செய்யலாம் என, நாங்கள் யோசனை செய்தோம். முடிவில், ஒரு வரி பதில் உள்ள, ஆயிரம் பொது அறிவுக் கேள்விகளை தொகுத்து, அதை டி.டி.பி., செய்து, பிரின்ட் எடுத்து, பின் ஜெராக்ஸ் செய்து, ஒரு சிறு கையேடு தயாரித்து, 10வது, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கினால், அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என திட்டமிட்டோம்.

அதன்படி இத்திட்டத்தை செயல்படுத்த, டி.டி.பி., ஜெராக்ஸ் கடைகளில் விசாரித்த போது, விலை விவரத்தை கூறியவர்கள், நாங்கள் மாணவர்களுக்கு கையேடுகளை இலவசமாக கொடுத்து உதவி செய்வதை அறிந்து, கட்டணத்தில் சிறிது சலுகை அளிக்க முன் வந்தனர். இருநூறு கையேடுகள் தயாரித்து, மாணவ - மாணவியருக்கு வழங்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

மற்ற வாசகர்களும், நண்பர்களுடன் இணைந்து, இதுபோல குறைந்த செலவில், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்ய முன் வந்தால் மகிழ்ச்சியே!

— தி.சுந்தரரேசன், கோவை.

* மஹாசமாதியான காஞ்சி முனிவர், வீடுகள் தோறும் தினமும் ஒரு கைப்பிடி அரிசி சேமித்து, அதன் மூலம் ஏழைகளின் பசிப்பணி போக்கும் அன்ன தான திட்டத்தை இப்படித்தான் துவங்கினார்.

— பொறுப்பாசிரியர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us