தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 15, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த பகட்டுக் கலாசாரம் தேவையா?

சென்னையில், சமீபத்தில் ஒரு பிரபலமான, புத்தகக் கடைக்குப் போயிருந்தேன். அங்கு, ஒரு பணக்கார பெண்மணி, 16 பாகங்கள் கொண்ட, 'என்சைக்ளோபீடியா' புத்தக செட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு புத்தகமும், தோல் அட்டை போடப்பட்டு, பார்க்கவே கம்பீரமாக இருந்தது. ஆர்வமிகுதியில், அந்த பெண்மணியின் அருகில் சென்று, 'உங்கள் குழந்தைகள் படிக்கவா?' எனக் கேட்டேன்.

'இல்லை... வீட்டுல, இரண்டு லட்ச ரூபாயில், புதுசா மர வேலைப்பாடுகளுடன், ÷ஷாகேஸ் செய்திருக்கேன். இதை, எல்லாம் கம்பீரமா அதுல வச்சா, பிரமிப்போட எல்லாரும் பார்ப்பாங்களே... அதுக்குத்தான்!' என்றார் அவர்.

அந்த பெண்மணி, வேறுபக்கம் சென்றதும், கடைக்காரர் என்னிடம் அடித்த கமென்ட் இது...

'இவங்க பரவாயில்லை மேடம்... இங்கிலீஷ்ல தான் புத்தகம் வாங்கி யிருக்காங்க. இன்னும் சிலர், அட்டை நல்லா இருக்குன்னு, பாஷை தெரியாத புத்தகங்களையெல்லாம் வாங்கி அடுக் குறாங்க...' என்றார்.

அர்த்தமில்லாத இந்தப் பகட்டுக் கலாசாரத்தை நினைத்து, எனக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை!

மெஹ்னாஸ், கீழக்கரை.

நண்பன் செய்த மறுமணம்!

திருமணமாகி ஐந்தாண்டுகளா கியும், நண்பனுக்கு குழந்தை இல்லை. இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்றும், வெயிட் பண்ணி பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி விட்டனர்.

இந்நிலையில், தான், இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகச் சொல்லி, அழைப்பிதழ் வைக்காமல், வரச்சொல்லி விட்டு சென்றான். குறிப்பிட்ட தேதியில், சென்றிருந்தேன்.

முதல் மனைவி புதுபட்டுச் சேலை, மாலை என, மணவறையில் அமர்ந் திருக்க, அவரின் கழுத்தில் முன்பு கட்டியிருந்த பழைய தாலியைக் கழற்றி விட்டு, ஐயரை மந்திரம் சொல்லச் செய்து, புதுத்தாலியை கட்டினான் நண்பன். நாங்கள், திகைத்துப் போனோம்.

உடனே நண்பரிடம், 'என்னடா இது கூத்து?' என்றேன். 'இந்த உலகத்துல எவ்வளவோ அற்புதங்கள் நடக்குது. அது போல நம் வாழ்க்கையிலயும் ஏன் நடக்காது? நம்பிக்கை வைப்போமே... வித்தியாசமா இப்படி செய்துதான் பார்ப்போமே... 5,000, 10 ஆயிரம் செலவு செய்து, ஜோசியர்கள் சொல்ற பரிகாரத்தை, விழுந்து விழுந்து செய்றோம்ல... நம்மை மீறி இருக்கிற சக்தி மேல, இருக்கிற நம்பிக்கையிலும், மனோதத்துவ அடிப்படையிலும் தான், இப்படியொரு முடிவை எடுத்தேன்... கட்டின மனைவி மனசை நோகடிக்க விரும்பல...' என்று, விளக்கமளிக்க, வியந்து போனேன்.

சிந்திக்க வைக்கும் முடிவல்லவா இது?

ரா.சிவக்குமார், அறந்தாங்கி.

தவறு யாருடையது?

நான் ஒரு பள்ளி ஆசிரியை. எட்டாம் வகுப்பில் படிக்கும் என் மாணவி ஒருத்தி, பள்ளியிலிருந்து விலகப் போவதாகக் கூறவே, அவளிடம் விளக்கம் கேட்டேன். அவள் வெட்கப்படவே, 'அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது...' என்று, சக மாணவியர் கூறினர்.

இதை கேட்டு அதிர்ந்த நான், 'சின்னப் பெண்ணுக்கு திருமணமா... நாளை, உன் பெற்றோரை அழைத்து வா...' எனக் கூறினேன். அவர்களிடம் கேட்க, 'சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு, அவள் அத்தை பையனை கட்டி வைக்கப் போகிறோம்...' என்று கூறினர்.

எவ்வளவோ எடுத்துக் கூறியும், அதை கேட்க மறுத்து, பிடிவாதமாக படிப்பை நிறுத்தி, திருமணமும் செய்து விட்டனர். காலப்போக்கில், அதை நான் மறந்தும் போனேன்.

ஏறக்குறைய, இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் அவளை ஒரு மருத்துவமனையில் பார்த்தேன். மாணவியுடன் வந்திருந்த அவள் அம்மா, நான் கேட்காமலேயே,'நண்பர்களுடன் குளிக்கப் போன என் மகளின் கணவன், கடலில் மூழ்கி இறந்து விட்டார். அவளின் எதிர்காலத் திற்காக, அவளை படிக்க வைக்கப் போகிறேன். பள்ளியில் சேர்க்க உதவி செய்வீர்களா?' என்று கேட்டார்.

முன்னாள் மாணவியை, ஏற, இறங்க பார்த்த நான், மீண்டும் திடுக்கிட்டேன். பூசினாற்போல் இருந்த அவளது வயிற்றைப் பார்த்ததுமே, அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது, எனக்கு ஓரளவு புரிந்து போனது.

இந்நிலையில், படிக்கப் போகிறாளா?

அறியாத வயதில் திருமணம்; கணவன் அற்ப ஆயுளில் போய் விட்டான்; வயிற்றிலே பிள்ளை வேறு. சின்னப் பெண்ணுக்கு இத்தனை சோதனைகளா!

இது யார் தவறு... அறியாமையா, அசட்டுத் தனமா?

பெயர் வெளியிட விரும்பாத, சென்னை வாசகி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us