தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/போணியாகாத படிப்பு!

போணியாகாத படிப்பு!

போணியாகாத படிப்பு!


PUBLISHED ON : பிப் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடற்கரை மணலில், அழகிய சிற்பங்களை வடிப்பதில் பெயர் பெற்றவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக்!

இவர், இக்கலையை சுயமாக கற்று தேர்ந்து, இன்று உலக அளவில் பல போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவித்து வருகிறார்.

இவரின் வெற்றியே, பலரையும் இத்துறையில் நுழைய தூண்டியது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில், மணல் சிற்பங்களை வடிப்பதில், பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. விளைவு, 2006ல் மணிபால் கே.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்ரீநாத், ரவி மற்றும் முல்கியில் டிராயிங் மாஸ்டராக பணிபுரியும் வெங்கியும் இணைந்து, 'மணிபால் சாண்டு ஹார்ட்' என்ற அமைப்பை துவக்கினர்.

இவர்கள், இதுவரை, 50க்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களை உருவாக்கி, மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். புகை எதிர்ப்பு தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்று குறிப்பிட்ட, 'தீமில்' மணல் சிற்பங்களை வடிப்பர். இவர்களைப் போன்றே மேலும் இரண்டு, மூன்று குழுக்களும், இந்த மணல் சிற்பத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மணல் சிற்பங்களை உருவாக்குவது எப்படி?

முதல் நாள், மணல் மற்றும் தேவையானவற்றை தயார் செய்து வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை, 6:00 மணிக்குச் சென்று, ஐந்து மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க சிற்பத்தை வடிக்க வேண்டும். சிற்பம் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தால், ஒரு நாளைக்கு மேல் தாங்காது; பராமரிப்பதும் கஷ்டம். அத்துடன், கடற்கரை மணலில், வெயிலில் வேலை செய்ய வேண்டும். இதனாலேயே, இத்துறையை தொழிலாக ஏற்க, இளைஞர்கள் முன் வர தயங்குவதுடன், முன்பிருந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us