sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

/

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்


PUBLISHED ON : ஏப் 26, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகைகள் அணிவது, நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

நகைகள் அணிவதன் மூலம், நம் உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகளை துாண்டி, ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் மட்டுமே ஏற்றது.

ஆபரணங்கள் அணிவதால், நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி, முத்து மற்றும் பவளம் போன்ற நகைகளை அணிவதாலும், நன்மை உண்டாகிறது.

நெற்றிச் சுட்டி: தலையிலிருந்து தவழ்ந்து, நெற்றியில் அழகாக குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது. நெற்றிச்சுட்டி அணியும்போது, தலைவலி, 'சைனஸ்' பிரச்னைகளை சரி செய்கிறது.

தோடு: காதில் அணியும் ஆபரணம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அணிவதுண்டு. காது குத்தும் வழக்கம் நம் சமூகத்தில், ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரம் இட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம், கண் பார்வையை வலுப்படுத்த தான்.

கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், கூர்மையான கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன; மூளையின் செயல்திறனும் அதிகரிகிறது.

மூக்குத்தி: மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும், பெருங்குடல் மற்றும் சிறு குடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் துாண்டப்படும்போது, அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கும் உதவுகிறது.

தாலி, செயின், நெக்லஸ்:கழுத்தில் செயின் அணியும்போது, உடலுக்கும், தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக, 'பாசிட்டிவ் எனர்ஜி' கிடைக்கிறது. மேலும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.

மோதிரம்: பாலுறுப்புகளை துாண்டும் புள்ளிகள், மோதிர விரலில் உள்ளது. விரல்களில் அணியப்படும் மோதிரம், 'டென்ஷன்' குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால், இதய கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்க உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

வங்கி: கையின் மேற்பகுதியில், தோள் பட்டைக்கு கீழாக அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராகி, பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது.

மார்பக புற்றுநோய் வருவது தவிர்க்கப்படுவதாக, ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

லம்பாடி பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் வருவதில்லை. காரணம், மணிக்கட்டிலிருந்து முழங்கை மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால், மார்பு பகுதியின் ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

ஒட்டியாணம்: இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக துாண்டப்பட்டு, ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும். இந்த அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்கும். வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.

வளையல்: முன் கை பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம், உடலில் வெள்ளையணு உற்பத்தி அதிகரிக்கிறது. முக்கியமாக, 'ஹார்மோன்கள்' சுரப்பும் சரியாக நடக்கிறது. இதன் மூலம், கர்ப்பிணி தாய்க்கும், சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது. சீரான ரத்த ஓட்டத்திற்கு, தங்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களும், பெண்களுக்கு கை கொடுக்கின்றன.

இவை வட்ட வடிவில் இருப்பதால், வளையல்கள் மூலம் துாண்டப்படும் மின் காந்த ஆற்றல் யாவும் வீணாகாமல், உடலுக்குள்ளேயே செலுத்தப்படுகிறது. இதனால், அவர்களுடைய சக்தி அதிகரித்து, உள்ளங்கைகளும் வலுவாகின்றன.

கொலுசு: கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர் பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை துாண்டி விடும் அற்புதமான அணிகலன், கொலுசு. தடிமனான கொலுசு அணிவதன் மூலம், கர்ப்பப்பை இறக்க பிரச்னையை தீர்க்கலாம்.

தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால், வெள்ளியை காலில் அணிகிறோம். அத்துடன், நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்குகிறது, வெள்ளி.

கொலுசு, குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால், அதன் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும், எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை நீக்குவதிலும், முக்கிய இடத்தை வகிக்கிறது.

மெட்டி: கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான், கருப்பையின் நரம்பு நுனிகள் முடிகின்றன. எனவே, மெட்டி அணிவது, கர்ப்பப்பையை பலப்படுத்தும். 'செக்ஸுவல் ஹார்மோன்'களைத் துாண்டும். மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். மெட்டியும், வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்






      Dinamalar
      Follow us