sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 01, 2024

Google News

PUBLISHED ON : டிச 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா -கே

லென்ஸ் மாமா, புகைப்படம் எடுக்க, வெளியே சென்றிருக்க, நான், 'இ-மெயிலில்' வந்திருந்த வாசகர் கடிதங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மாமாவின் கேபினுள் புத்தகங்களை குவித்து வைத்து, புரட்டிக் கொண்டிருந்தார், 'திண்ணை' நாராயணன்.

மதிய உணவு இடைவேளை வந்தும், இடத்தை விட்டு நகரவில்லை, நாராயணன்.

உதவி ஆசிரியர்கள், சாப்பிட சென்று விட, லென்ஸ் மாமாவுக்காக காத்திருந்தேன், நான்.

கேமரா பையுடன் உள்ளே வந்த லென்ஸ் மாமா, தன் கேபினுள், நாராயணன் இருப்பதைப் பார்த்து, 'ஓய், நாணா... புத்தக குவியலுக்குள் தலையை விட்டுக்கிட்டு என்ன தேடுகிறீர்?' என்றார்.

'இந்த வாரத்துக்கான, 'திண்ணை' மேட்டர் ஒன்றும் சரியா கிடைக்கலை. அதான் தேடிக்கிட்டு இருக்கேன்...' என்றார்.

வாட்ச்சைப் பார்த்து, 'அடடா... சாப்பாட்டு நேரம் வந்துவிட்டதே... மணி, பசிக்கிறது. பையனை ஹோட்டலுக்கு அனுப்பி (ஹோட்டலின் பெயரை குறிப்பிட்டு) சாப்பாடு வாங்கி வர சொல்றியா?' என்றார், நாராயணன்.

'அந்த ஹோட்டல் ரொம்ப துாரத்தில் இருக்கிறது. போய் வருவதற்குள் நேரமாகி விடும். பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் ஏதாவதில் வாங்கிக் கொள்ளலாமே?' என்றேன், நான்.

'இப்ப இதெல்லாம், 'சப்பை' மேட்டர். துாரமா இருந்தால் என்னப்பா, 'ஸ்விக்கி' அல்லது 'சொமோட்டோ' போன்ற, 'டெலிவரி' ஏஜென்டுகளிடம், 'ஆர்டர்' செய்தால், அரைமணி நேரத்தில் வந்துவிட போகிறது...' என்றார், மாமா.

'ஆமாம், நான் கூட பார்த்திருக்கிறேன். டூ-வீலரில், சிகப்பு பனியன் அணிந்து, முதுகில் பெரிய பையை சுமந்துகிட்டு, 'சர் சர்' என்று படுவேகமாக போவர். அப்படியே செய்துடு, லெஞ்சு...' என்றார், நாராயணன்.

உடனே, தன் மொபைலை எடுத்து, நாராயணன் கேட்ட உணவுகளுடன், தனக்கு விருப்பமானவைகளை, 'ஆர்டர்' செய்தவர், 'உனக்கு ஏதாவது சொல்லட்டுமா, மணி...' என்று கேட்டார், லென்ஸ் மாமா. வேண்டாம் என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினேன், நான்.

'உணவை நாம் இருக்கும் இடத்துக்கே, 'டெலிவரி' செய்யும் ஐடியா எப்படி வந்தது ஓய்? சாப்பாடு வரும் வரை கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செய்து கொள்கிறேன்...' என்று, லென்ஸ் மாமாவிடம் கூறினார், நாராயணன்.

கூற ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:

நம்மூரில் சில ஆண்டுகளுக்கு முன் தான் அறிமுகமானது. ஹோட்டலுக்கு செல்ல முடியாதவர்கள், வயதானவர்கள் ஆகியோர், ஹோட்டலிலிருந்து தங்களுக்கு விருப்பமான உணவை, இதுபோன்ற, 'டெலிவரி' ஏஜென்சி மூலம், 'ஆர்டர்' செய்து, வரவழைத்து கொள்ளலாம்.

குறிப்பாக, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் இளம் தலைமுறையினர் தான், இதை பிரபலப்படுத்தினர் என்றே கூறலாம்.

இந்தியாவில், இப்படி, 'சப்ளை' செய்ய, ஏழு மில்லியன் (1 மில்லியன் - 10 லட்சம்) ஊழியர்கள் உள்ளனர். இது, 2030ல், 25 மில்லியனாக அதிகரிக்கும் என்கின்றனர். 450 ரூபாய்க்கு, 'ஆர்டர்' செய்தோமானால் எடுத்து வந்து கொடுப்பவருக்கான, 'சர்வீஸ் சார்ஜ்' ஆக, 75 ரூபாய், அதில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இதில், வேலை செய்பவர்களுக்கு தினமும், குறைந்தது, 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கிடைக்கும். வண்டி பெட்ரோல் செலவை குறைத்தால், மீதி கைக்கு!

தினமும், 1.4 மில்லியன், 'ஆர்டர்'களை கொண்டு சேர்க்கிறது, 'ஸ்விக்கி!'

'ட்ரோன்' மூலம் கூட, 'சப்ளை' செய்கின்றன, பிரபல நிறுவனங்கள்.

வினியோகம் செய்வோர் பரபரப்பாக செயல்படுவதற்கு காரணம், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவை, 'சப்ளை' செய்யப்பட வேண்டும். மாறாக, 'ஆர்டர்' செய்தவர்கள், 'சப்ளை'யை ஏற்கவில்லை எனக் கூறினால், அந்த செலவு, ஊழியர்களின் தலையில் விழும்.

இந்த துறையில் பிரபலமானவர்கள் யார் யார் தெரியுமா?

1.சொமோட்டோ: 2010ல், ஹரியானாவில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, இது பன்னாட்டு உணவு வினியோக நிறுவனம். தற்சமயம், கூடுதலாக மளிகை பொருட்கள் மற்றும் வேறு சில பொருட்களை, 'சப்ளை' செய்கிறது.

உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட, 24 நாடுகளில் இதன் சேவை உள்ளது.

2.ஸ்விக்கி: 2014ல், கர்நாடகாவில் ஆரம்பிக்கப்பட்டது. பண்டி டெக்லாஜீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பிராண்ட் தான், 'ஸ்விக்கி!'

சொந்த கிளவுட் கிச்சன் உண்டு. இவற்றை, ஸ்விக்கிகோ என்ற பெயரில் பிராண்ட் செய்கிறது. ஹோட்டலில், டேபிள் முன்பதிவு செய்து தருவதோடு, மளிகைப் பொருட்களையும் வினியோகம் செய்கிறது.

3.புட் பாயின்ட்: 2012ல், ஹரியானாவில் துவங்கப்பட்டு, உலகளாவிய, 'ஆன்லைன்' உணவு வினியோக தளமாக விரிவடைந்துள்ளது.

தற்போது, டெலிவரி மற்றும் ஹீரோ வாகன நிறுவனத்தின் துணை நிறுவனமாகவும் செயல்படுகிறது. ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட, 40 நாடுகளில் செயல்படுகிறது.

4.பாசோஸ்: 2011ல், மஹாராஷ்டிராவில் துவக்கப்பட்டது. உணவு வினியோகம் இதன் பிரதான சேவை. இந்தியா முழுவதும், 15 நகரங்களில் செயல்படுகிறது.

இந்திய, சீன, இத்தாலியன், மெக்சிகன் மற்றும் பல பிரபலமான உணவுகளை வழங்குகிறது. சொந்த கிளவுட் கிச்சன், விரைவு சேவை உணவகங்களையும் நடத்துகிறது. இந்தியாவின் மிக புதுமையான நிறுவனங்களில் ஒன்று, இது.

5.டோமினோஸ்: 1960ல் ஆரம்பிக்கப்பட்ட, அமெரிக்க பன்னாட்டு, 'பீசா' நிறுவனம். பல நாடுகளில் மொத்தம், 17 ஆயிரம் கடைகளை கொண்டுள்ளது.

பெப்பரோனி, சீஸ், சிக்கன் டிக்கா மற்றும் தந்துாரி என, 'வெரைட்டி'யை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும். பிரெட்ஸ்டிக்ஸ், சிங்கள் விங்க்ஸ், சாலட்டுகள், சாக்லேட் லாவா கேக் என, 30 நிமிட டெலிவரியை முதன்முதலில் கொண்டு வந்தது, இது தான்.

- என்று முடித்தார், மாமா.

அடுத்த பத்தாவது நிமிடம், உணவு பார்சல் வந்துவிட்டது.

பார்சலை பிரித்து, தக்காளி சூப், பட்டர் நான், கடாய் வெஜ், சாதம், மோர்க் குழம்பு என, தென் மற்றும் வட மாநில உணவு வகைகளை பரப்பி வைத்து, சாப்பிட ஆரம்பித்தனர்.



ஒரு கட்டடத்தின், 25வது மாடியிலிருந்த முதலாளி, முதல் மாடியில் இருந்த குமாஸ்தாவை அவசரமாக போனில் அழைத்து, முக்கியமான கோப்பை எடுத்து வருமாறு பணித்தார்.

அரை மணி நேரம் ஆகியும், குமாஸ்தாவை காணோம்.

பதற்றத்தில், விரல் நகங்களை கடித்துக் கொண்டிருந்தார், முதலாளி.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, ஆஜரானார், குமாஸ்தா. திகைத்துப் போன முதலாளி, தாமதத்துக்கான காரணத்தை கேட்டார்.

'சார், வேகமா வந்துடணும்ன்னு தான், கோப்புகளோடு, 'லிப்டு'க்குப் போனேன். அங்கே பார்த்தா, 'அவசர காலங்களில் படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்'ன்னு எழுதி இருந்துச்சு. நான் என்ன பண்ணட்டும்?' என்றார், குமாஸ்தா.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us