sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 15, 2024

Google News

PUBLISHED ON : டிச 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா- கே

அலுவலகம்.

நாளிதழைப் படித்துக் கொண்டிருந்த, 'திண்ணை' நாராயணன், சமீபகாலமாக, சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து அடிபடுகிறதே...ரொம்ப காலமா இருந்த புகைச்சல், இப்போது தான் வெடிக்க ஆரம்பித்து விட்டதோ...' என்றார்.

'ஓய், நாணா... விஷயம் தெரியாமல் பேசாதீர். இந்த, 'டிரெண்ட்' பல காலமாகவே நடந்து வருவது தான். இலைமறை காயாக இருந்த விஷயம், இப்ப, 'சோஷியல் மீடியா' மூலம் பரபரப்பாகி விட்டது...' என்றார், லென்ஸ் மாமா.

'மாமா, இப்படி ஏதாவது சொல்லிட்டு, ஏடாகூடமாக மாட்டிக்கொள்ளாதீர்...' என்றார், உ.ஆசிரியை ஒருவர்.

'இதன் பின்னணி அறிந்தால், இப்படி கேள்வி கேட்க மாட்டீர்கள்...' என்றவர், கூற ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:

இந்த ஆண்டு வருமானமா உங்க கிட்டே, ரூ.2,000 கோடி இருக்குன்னு வைத்துக்கொள்வோம். அதுக்கு நீங்க, 600 கோடி ரூபாயை அரசுக்கு வருமான வரியாக கட்ட வேண்டியுள்ளது. மிச்ச கையிருப்பைக் கொண்டு, சொத்து வாங்கிப் போட, அதுவோ, அடுத்த வருஷம் 3,000 கோடி மதிப்புள்ளதா மாறிடுது. அதுக்கு சொத்து வரியா, அரசுக்கு ரூ.600 கோடி கட்ட வேண்டும்.

ஆக மொத்தம் 1,200 கோடி ரூபாயை அரசுக்குத் துாக்கிக் கொடுக்கணும். ஆனால், ஒத்த பைசா கொடுக்காம, மிச்சப்படுத்தறதுக்கு சட்டத்தில் ஒரு வழி இருக்கு. உங்க மனைவியை நீங்க விவாகரத்து பண்றதா பொய் சொல்லி, நடித்து, ஏமாத்தி, மனைவிக்கு உங்க மொத்த சொத்தையும் ஜீவனாம்சமாக கொடுத்ததா நஷ்டக் கணக்கு காட்டிடலாம். அப்ப, நீங்க வரி எதுவும் கட்ட வேண்டாம். அதே நேரம், ஜீவனாம்சமாக கிடைச்ச பணத்துக்கு, உங்க மனைவியும் ஒத்த ரூபாய் வரியாக கட்ட வேண்டாம்.

இப்படி அரசுக்கு பட்டை நாமம் போட்டு, நான்கு சுவருக்குள், விவகாரத்து செய்த மனைவியுடன் ஒரே வீட்டில் வழக்கம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம். தேவைப்பட்டா அடுத்த நாளே, மீண்டும் அவரையே திருமணமும் செஞ்சிக்கலாம்.

இந்த விஷயம் தெரிந்துதான், ஆயிரமாயிரம் கோடிகளை இப்படிக்கூட சேமிக்க முடியுமா என வாயைப் பிளந்த திரையுலக மற்றும் இன்னப் பிற பண முதலைகளும் இதை காப்பியடித்து தான், தொடர்ச்சியான நாடக விவாகரத்து அறிவிப்புகள் வெளியிடுகின்றனர்.

இதுவே, இஸ்லாமிய திருமண சட்டத்தில் கொஞ்சம் மாற்றத்துடன் காணப்படுகிறது. அங்கு ஆண், விவாகரத்து செய்தால், மனைவிக்கு சொற்ப பணமே, ஜீவனாம்சமாக கொடுத்தால் போதும். மேலும், இஸ்லாமிய ஷரியத் ஜமாத் விதிகள் படி திரும்பவும், அதே பெண்ணுடன் உடனே, சேர்ந்து வாழ முடியாது.

ஜமாத் முன்னிலையில், 'தலாக்' செய்யப்பட்ட அந்த மனைவி, வேறொருவரை, நிக்ஹாக் செய்து, அவருடன் ஒருநாளாவது படுக்கையைப் பகிர்ந்து, தம்பதிகளாக வாழ வேண்டும். அதன் பின்னரே, அந்த புதியவனை, 'தலாக்' செய்துவிட்டு, பழைய கணவனுடன் திரும்பச் சேர்ந்து, புது, 'நிக்ஹாக்' செய்து வாழ முடியும். இதை அவர்கள், 'நிக்காஹ் ஹலால்' என்கின்றனர்.

அதே நேரம், 'பாய்' அம்மா, தானே முன்வந்து, கணவனை சட்டப்படி விவாகரத்து செய்தால், மேற்கண்ட ஷரியத் தொல்லைகள், ஜமாத் தலையீடு, திரும்ப இணைவதைத் தடுக்கும், நிக்காஹ் ஹலால் என, எந்தத் தடைகளும் இல்லை. இந்திய அரசியல் சட்டப்படி இந்துப் பெண்ணிற்குக் கிடைக்கும் வரிச்சலுகை மற்றும் மொத்தச் சொத்தையும் கூட ஜீவனாம்சமாக பெறும் உரிமை அந்த, 'பாய்' அம்மாக்கு உண்டு.

ஆக, வழக்கமாக இஸ்லாமிய ஆண் செய்யும் தலாக்குக்குப் பதில், இசைப்புயலின் மனைவி, ஜமாத்தை அணுகாமல், இஸ்லாமிய ஷரியத் சட்ட திட்டங்களின் கீழ் செயல்படாமல், தன் வக்கீல் மூலம் சட்டப்பூர்வமான விவாகரத்திற்கு மனு போட்டதில் இருந்தே, எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இப்போது புரிகிறதா?

தொடர் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னணியில் இருக்கும் விஷயம்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், பாதிக்கு பாதி அரசுக்கு வரியாக செலுத்த யாருக்குத்தான் மனசு வரும்...' என்று முடித்தார், லென்ஸ் மாமா.

இப்படிக்கூட இருக்குமோ என்று யோசித்தேன், நான்.



பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தான், ஒருவன். கடும் வெயில் சுட்டெரித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவே இல்லை. தான் கொண்டு வந்த தண்ணீரும் தீர்ந்துபோனது. நாக்கு வறண்டது. எங்காவது தண்ணீர் கிடைத்துவிடாதா என்று அலைந்து திரிந்தான்.

துாரமாக ஒரு அடி குழாய் தெரிய வேகமாக சென்று, தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்தான்.

அவ்விடத்தை சுற்றிலும், தண்ணீர் இருந்ததற்கான சுவடே தெரியவில்லை. அந்த அடிகுழாய் அருகில், தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்தது. அந்த பாட்டிலை எடுக்க சென்ற போது, அதன் அருகே, ஒரு போர்டு இருந்தது.

அதில், 'இந்த பாட்டிலுள்ள தண்ணீரை நீங்கள் குடிக்கலாம். ஆனால், இந்த நீரை இந்த குழாயில் ஊற்றி அடித்தால், உள்ளிருந்து ஒரு ஊற்று கிளம்பும். உங்கள் தேவைக்கும் அதிகமாவே தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்...' என்று எழுதியிருந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். பின், துணிந்து பாட்டிலிலுள்ள நீரை, குழாயில் ஊற்றி அடிக்க ஆரம்பித்தான்.

முதல் அடி, இரண்டாம் அடி... ஐந்தாம் அடியில், உள்ளிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. மகிழ்ச்சியோடு அந்தத் தண்ணீரை பருகி, தன்னிடமிருந்த பாட்டில்களில் எல்லாம் நீரை நிரப்பிக் கொண்டான்.

பின்னர், அதே பாட்டிலில் நீரை நிரப்பி வைத்து, அந்த போர்டில், 'இது உண்மை. சத்தியம். என் அனுபவத்தில் உணர்ந்தேன்...' என்று, எழுதி வைத்து சென்றான்.

வாழ்க்கை எனும் பாலைவனத்தில் நமக்கான குழாய்களும், தண்ணீர் பட்டில்களும் இருக்கின்றன. எவன் ஒருவன் தண்ணீரை மட்டும் பருகிவிட்டுச் செல்கிறானோ, அவன் ஊற்று என்ற மகிழ்ச்சியில் குளிக்கவே முடியாது. எவன் ஒருவன் துணிந்து தண்ணீரைக் குழாயில் ஊற்றுகிறானோ, அவன் மட்டுமே மகிழ்ச்சி என்னும் வெள்ளத்தில் மூழ்க முடியும்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

****

மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சி ஷார்ஜாவிலும், துபையிலும் நடைபெறுகிறது. இதில், அந்துமணியின், 38 வகையான நுால்கள் இடம் பெறுகின்றன. இதற்கான அழைப்பிதழை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனரும், அந்துமணியின் அம்பாசிடருமான ரவி தமிழ்வாணன் வழங்கி சென்ற போது எடுத்த படம்.






      Dinamalar
      Follow us