sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 28, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.சுகுமார், காட்டுக்கானுார்: தாங்கள் பொக்கிஷமாக எதையாவது பாதுகாத்து வருகிறீர்களா?

வாசகர்கள் தான். நீங்கள் தானே என் பொக்கிஷம்!

க.கல்பனா, சென்னை: தமிழக துணை முதல்வராக, உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறதே... மூத்த தலைவர்கள், தி.மு.க.,வில் பலர் இருக்கும்போது, ஏன் குடும்பத்தினருக்கே இப்பதவி வழங்கப்படுகிறது?

வேறு யாரும் திறமைசாலிகளாக ஸ்டாலின் கண்களுக்குத் தெரியவில்லையோ, என்னவோ!

வி.மாயகிருஷ்ணன், புதுக்கோட்டை: கட்டாந்தரையில், துண்டை விரித்துப் போட்டு, துாங்கிய அனுபவம் உண்டா?

கட்டாந்தரையில் படுத்ததில்லை; 'தினமலர்' நாளிதழ் அதிகாலை அச்சாகி முடிந்ததும், 'நியூஸ் பிரின்ட் ரோலின்' பக்கவாட்டில் வைத்து அனுப்பப்படும், பாளத்தை விரித்து, ஆபீசில் படுத்துக்கொண்ட அனுபவம் உண்டு!

முகதி.சுபா, திருநெல்வேலி: தமிழகத்திலும், கர்நாடகத்திலும், கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்தாலும், காவிரி பிரச்னையை தீர்க்காமல் இருக்கின்றனரே... ராமகிருஷ்ண ஹெக்டே காலத்தில், தீர்வு கண்டாரே, எம்.ஜி.ஆர்.,?

நிரந்தர தீர்வு எப்போதும் ஏற்பட்டதில்லையே.எம்.ஜி.ஆர்., அவ்வப்போது பேசி, தமிழகத்துக்கு தண்ணீரை வரவழைத்து விடுவார்; அவ்வளவு தான்!

பாரதிமுருகன், மணலுார்பேட்டை: ஞாயிறு அன்று அசைவமா அந்துமணியாரே?

நான் தான் முட்டை கூட சாப்பிட மாட்டேனே... சுத்த சைவம் தான்!

தே.ராஜாசிங் ஜெயகுமார், தஞ்சாவூர்: தமிழக அரசின் கள்ளச்சாராயத்துக்கு எதிரான புதிய சட்டம், ஏதாவது பலன் தருமா?

கண்டிப்பாக பலன் தரும், மிக தீவிரமாக அமல்படுத்தினால்!

* அஜித், மாடம்பாக்கம், சென்னை: லோக்சபாவில் அனல் பறக்கிறதே... இது நாட்டுக்கு நன்மையா, தீமையா?

நல்லதே அல்ல; நம் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறதே!

* தே.மாதவராஜ், கோவை: முதல்வரின் காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகளைக் கடந்து, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவாக்கம் செய்தது பற்றி?

நல்ல திட்டம் தான்; நல்ல முறையில் செயல்பட வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us