
ஜெ.ரவிக்குமார், திருப்பூர்: கவிஞர் வைரமுத்துவுக்கு, 'முத்தமிழ் பேரறிஞர் பட்டம்' கொடுத்துள்ளதே, மதுரை தமிழ் இசைச் சங்கம்! அவரை வாழ்த்தினீர்களா?
அவர் அழைத்தார்; வாழ்த்தினேன்!
* சி.சசிகலா, விருதுநகர்: மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் உதவித் தொகை கொடுப்பதாக அறிவித்து விட்டு, மாணவர்கள் படிக்கும் புத்தகங்களுக்கான வரித் தொகையை, அரசு அதிகரித்திருப்பது நியாயமா?
இல்லை; மாணவர்களுக்கு இத்தகைய சுமையைக் கொடுக்கக் கூடாது!
ஆர்.பிரகாஷ், பொன்மலை: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 62 ஆக உயரப் போகிறதாமே?
கடும் எதிர்ப்பு இருப்பதால், உயராது!
ஜி.அர்ஜுனன், அவிநாசி: கலைஞர் நுாற்றாண்டு, 100 ரூபாய் நாணயத்தில், ஹிந்தி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதே?
அச்சா, அச்சா! பஹூத் அச்சா ஹை!!
* எம்.மனோகரன், ராமநாதபுரம்: 'கார் பந்தயத்துக்குச் செலவிடும் பணத்தை, பஸ்களை சீரமைக்க செலவழிக்கலாம்...' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளாரே...
செய்ய வேண்டும்; தி.மு.க., அரசு யோசிக்கட்டும்!
வி.வாசுதேவன், கோவை: 'அந்துமணி பதில்கள்' பகுதி, 'தினமலர் - வாரமலர்' இதழ் ஆரம்பித்ததில் இருந்து வருகிறதா அல்லது அதற்கு முன்பே, 'தினமலர்' நாளிதழில் வெளியானதா?
'வாரமலர்' இதழ் ஆரம்பித்த பிறகே!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு:டிராபிக் போலீசைக் கண்டு பயந்த அனுபவம் உண்டா?
என் காரைப் பார்த்ததும், வணக்கம் போடுவர்! அனைவருமே என் நண்பர்கள்; அனைவரையுமே, 'கவனித்து' விடுவேன்!
ஜா.ஜேம்சன், திருச்செந்துார்: பள்ளிப் பருவத்தில், முதல் பெஞ்சு மாணவரா, கடைசி பெஞ்சு மாணவரா?
கடைசி பெஞ்ச் தான்; உயரம் அதிகம் என்பதால், கடைசியில் உட்காரச் சொல்லி விடுவர்!
எல்.மகேஷ், மதுரை: நம்மை துாக்கி நிறுத்துவது எது?
அவமானங்களுக்கு நாம் அஞ்சக் கூடாது... நாம் சந்திக்கும் அவமானங்கள் தான், நம்மை செதுக்கும்! நாம் சந்திக்கும் துன்பங்கள் தான், நம்மை துாக்கி நிறுத்தும்!

